புது ஊழியம் New Ministry 59-0406 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் புது ஊழியம் (59-0406) ... மிக அதிகம், சகோதரன் டேவிட்..அது பரவாயில்லை. உங்களுக்கு நன்றி. (சபையார் Happy Birthday என்கின்ற பிறந்த நாள் பாடலை சகோதரன் பிரன்ஹாமுக்காக பாடுகிறார்கள், மேலும் ஒரு சகோதரன் ஒரு அன்பளிப்பை சகோதரன் பிரன்ஹாமிற்கு அளிக்கிறார்] உங்களுக்கு நன்றி. (சகோதரன் பிரன்ஹாமுக்கு, 'கிறிஸ்துவின் புதிய தலை’ என்று பெயரிடப்பட்டிருக்கிற ஒரு படம் அன்பளிப்பாக கொடுக்கப்படுகிறது] உங்களுக்கு மிகவும் நன்றி. உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. [ஒலிநாடாவில் பேசுகின்ற இன்னொரு சகோதரன் அந்தப் படத்தைப் பற்றின பல கருத்துக்களை குறிப்பிடுகிறார், இதுதான் அந்த படத்தை முதன் முதலில் வெளியிடுவதாகவும் அந்த படத்தில் இருக்கும் ஓவியத்தை ஆறு பேர் வரைய முயற்சித்து, ஏழாவது ஓவியர் அதை வரைந்தார் என்றும் அந்த சகோதரன் குறிப்பிடுகிறார்] 2. உங்களுக்கு மிகவும் நன்றி மேலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவரே என் ஆண்டவராயிருக்கிறார், என் இரட்சகராயி ருக்கிறார், ஒருவேளை, இன்னொரு பிறந்த நாளை நான் காணும் வரை ஜீவித்தால், அல்லது என் ஜீவியத்தில் வரப்போகின்ற ஆண்டுகளில் எத்தனை பிறந்த நாட்கள் வந்தாலும், என்னுடைய நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்தை யும் நான் அவருடைய சேவைக்காகவே வைத்திருப்பேன். ஆமென். (அது நன்றாக இருக்கும், உங்களுக்கு நன்றி.) 3. நீங்கள் அமரலாம். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அந்த சிறிய பிறந்த நாள், Happy Birthday To You-க்கு நன்றிகள் [பிறந்த நாளின் போது பாடும் Happy Birthday பாடல்]. இந்த படத்தை பெற்றுக்கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன் றைக்கு. என் நல்ல நண்பர், சாப்ளின் ஸ்டாட்ஸ்கெலேவும், அவருடைய குடும்பத் தாரும் என் அறைக்கு வந்து, எனக்கு சில அருமையானவைகளை அன்பளிப்பாக கொடுத் தார்கள். என் பையன், சிறிய பையன், ஜோசப், எனக்கு கழுத்து டையை கொடுத்தான், என் சிறு பெண் பிள்ளைகள், டை கிளிப்புகளை கொடுத் தார்கள். என் மனைவி என்னிடம் ஒரு நிபந்த னையை செய்தாள், நான் விக்கை (hairpiece) வைத்துக்கொள்வேனென்றால், அவள் எனக்கு ஒன்றை வாங்கித்தருவதாக கூறினாள். எனவே, நான் - நான் நினைத்தேன் அது... நான் அவளிடம், “நீ அதை வாங்கிக்கொடு, பின்பு நான் அதை வைத்துக்கொள்வேனா இல்லையா என்பதை பார்” என்றேன். ஆகவே, இது மகத்தான நாளாயிருக்கிறது. நிச்சயமாக, இப்போது நான் இருபத்தி ஐந்து வயதை கடந்து விட்டேன் என்பது எல்லாருக்கும் தெரியும். நான் 1909-ல் பிறந்தேன், எனவே அதை கணக்குபண்ண தெரிந்த எவருக்கும் நான் இருபத்தி ஐந்து வயதை கடந்து விட்டேன் என்பது தெரியும். 4. நல்லது, அது முழுவதும் அற்புதமாயிருந்தது, குறிப்பாக நான் கர்த்தரை சேவித்த இந்த முப்பது ஆண்டுகள். கடந்த காலத்தையும், கடந்து சென்ற ஆண்டுகளையும் குறித்து எனக்கு ஏதும் மனவருத்தம் இருக்குமென்றால், மீதமுள்ள அந்த இருபது ஆண்டுகள் நான் அவருக்கு சேவை செய்யாமல் போய்விட்டேனே என்பதுதான். இந்த ஆண்டுகளில் நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சிய டைகிறேன். ஜீவியத்தின் பாதைகளில் நான் பயணிக்கும் போது தேவன் எனக்கு உதவி செய்வார் என்றும், அதாவது தேவன் என்னை அவருடைய ஆவியால் வழிநடத்துவாரென்றும், நான் இந்த பூமியில் பிறந்த காரணத்துக்காக என் நன்றியுணர்வை காண்பிக்கும்படி ஏதோ வொன்றை நான் செய்ய அனுமதிப்பாரென்றும் நான் நம்புகிறேன். "5. இந்த காலை வேளையில் நான் எழுவதற்கு முன்பு, நான் என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன், நான், “தேனே, எனக்கு அவ்வளவு வயதாகிவிட்டது போன்று தோன்றவில்லை” என்றேன். பின்பு நான், ""ஆண்டுகள் மிக வேகமாக சென்றுவிட்டது போன்றிருக்கிறது” என்றேன். " ஆனால், நான், “நான் இந்த உலகத்தில் ஏதோவொரு நோக்கத்திற்காக பிறந்தேன், அது கர்த்தருக்கு சேவை செய்வதற்காகவே என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றேன். அதுதான் என் இருதயத்தின் வாஞ்சையாயிருக்கிறது. 6. உங்களிடம் இருந்து நான் எதை கேட்கிறேனென்றால், இன்றிரவு நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன்பு, தேவன் என்னை என் இருதயத்தில் தாழ்மையாக வைத்திருக்க வேண்டுமென்றும், எனக்கு உதவி செய்ய வேண்டுமென்றும், மேலும் என்னை ஆசீர் வதிக்க வேண்டுமென்றும் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்பதைத்தான் கேட்கிறேன், அப்போதுதான் ஜனங்களாகிய உங்களுக்கு என்னால் ஒரு ஆசீர்வாதமாயிருக்க முடியும். வாழ்க்கையில் இருப்பதிலேயே மிகப்பெரிய ஆசீர்வாதம் என்னவென்றால், ஏதோவொன்றை வெளியே கொடுப்பதாய் இருக்கிறது, உள்ளே வாங்கி வைத்துக் கொள்வதல்ல, ஆனால் வெளியே கொடுப்பதாயிருக்கிறது, நீங்கள் மற்றவர்களுக்காக என்ன செய்கிறீர்கள் என்பது தான் மிக முக்கியமாயிருக்கிறது என்பதை நான் கண்டறிந்தேன். நான்... 7. இன்றிரவு வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க ஆரம்பிக்க போகிறோம். சகோதரன் டுப்பிளேசிஸ் (duPlessis) நமக்கு ஒரு அருமையான செய்தியை கொடுத்தார், மேடைக்கு பின்னால் இருந்தேன், அங்கே பிரசங்க மேடைக்கு பின்னால் இருந்து, கவனித்துக் கொண்டிருந்தேன், இயேசு கிறிஸ்துவை உயர்த்துதல் என்கின்ற அந்த செய்தியை நான் நிச்சயமாக பாராட்டுகிறேன். 8. இன்றிரவு, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப் பதில் என் ஊழியத்தின் புதிய கட்டத்தை நான் இங்கே ஆரம்பிக்க விரும்புகிறேன். அநேகமாக இங்கே இருப்பவர்களில் பலப்பேர், என்னுடைய கூட்டங்களில் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறீர்கள், மேலும் ஆரம்பத்தில் என்ன கூறப் பட்டது என்று, எப்படியாக நான் ஜனங்களின் மீது கைகளை எடுத்து வைப்பேன் என்றும், அவர்களுடைய பிரச்சனை என்ன வென்பதை நான் அறிந்து கொள்வேன் என்றும் உங்களுக்கு தெரியும். "அதன்பின் நான் தாழ்மை யாகவும் உத்தமமாகவும் இருந்தால் ""அவர்க ளுடைய இருதயத்தில் இருக்கும் ஆழமான இரகசியங்களை நீ அறிந்துகொள்வாய்” அது நடக்கும் என்று அவர் என்னிடம் கூறினார். அது நடந்தது, அதை உலகமே அறியும். " 9. கர்த்தருடைய தூதனின் புகைப்படம் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட அந்த புகைப் படங்கள் எங்களிடம் இருந்தன, அதில் ஏதும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதா, அல்லது ஏதேனும் தவறு உள்ளதா, அல்லது அது இரண்டு படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு படமா (double-exposed) என்பதை காணும்படி, எங்களுக்கு தெரிந்ததிலேயே உலகத்தின் தலைசிறந்த கைரேகை நிபுணர்களாலும் மற்றவர்களாலும் அது பரிசோதிக்கப்பட்டது, அது அங்கேதான் இருந்தது என்று எப்போதுமே நிரூபிக்கப் பட்டது, அது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. அது சிறிது தனித் தன்மை கொண்டதாக, சராசரியாக இருப்பதிலிருந்து கொஞ்சம் வினோதமானதாக இருப்பதால் அது என் ஊழியத்தை வித்தியாசப் படுத்துகிறது என்று அர்த்தமல்ல... கிறிஸ்துவின் சேவையில் நான் இன்னுமாக உங்கள் அனைவருக்கும் சகோதரனாக இருக்கிறேன். நான் அவருக்கு சேவை செய்யும்படி அவர் என்னை அனுமதிப்பதால் மகிழ்கிறேன். ஒருவேளை நான் எதற்கும் பயன்படும் அளவுக்கு போதுமான கல்வி எனக்கு இல்லாதிருக்கலாம், அந்த காரணத்தால் தான் நான் அவருக்கு சேவை செய்யும்படி, அவர் எனக்கு இந்த வரங்களை கொடுத்திருப்பார். 10. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் இங்கே கலிபோர்னியாவில் இருந்தேன், இங்கே வருவதற்கு சற்று முன்னர், நான் பீனிக்ஸில் ஒரு கூட்டத்தை நடத்தினேன். அங்கே, என் கூட்டங்களில் அநேக ஜனங்கள் குறைக்கூறிக் கொண்டிருந்தார்கள் அதாவது அங்கே..., “ஏன், நீங்கள் ஐந்து பேருக்கு ஜெபிப்பதற்குள் சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் ஐம்பது பேருக்கு ஜெபித்து-ஜெபித்து விடுவார்” என்றார்கள். "11. நான், “அது உண்மை. சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் கர்த்தரிடமிருந்து கட்டளையை பெற்று, தேவன் எப்படி கூறுகிறாரோ அந்த வழியில் அவர் ஜனங்களுக்காக ஜெபிக் கிறார்; எனக்கு எப்படி கூறப்படுகிறதோ அவ்வாறுதான் நானும் செய்யவேண்டும்"" என்றேன். " 12. அப்போது நான் அதை ஜெபத்தில் வைத்து, எல்லா நேரங்களிலும் போதுமான பேர் மேடைக்கு வர முடியவில்லை என்று குறைக்கூறுவதை குறித்து நான் சிறிது நீண்ட நேரம் ஜெபித்தேன். நல்லது, உண்மையாக, வார்த்தையின் ஒரு அர்த்தத்தின்படி பார்த்தால் அது சரிதான். "13. இப்போது, இங்கே... கைகளை வைக்கிறதான யூதர்களின் வழக்கத்தால் அமெரிக்க ஜனங்கள் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அது புறஜாதிகளின் வழக்க மல்ல: அது யூதர்களுடையது. நினைவில் கொள்ளுங்கள், “வந்து, என் மகள் மீது உம்முடைய கைகளை வையும், அப்பொழுது அவள் பிழைப்பாள்"" என்று யவீரு கூறினான். " ஆனால் புறஜாதியோ, “நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் பாத்திரனல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் பிழைப்பான்” என்று கூறினது. அதுதான் வித்தியாசம். 14. இந்த ஊழியம் - என் ஊழியமானது - வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பதல்ல. ஒரு தெய்வீக வரத்தின் மூலம், பிரசன்னத்தை கொண்டு வரும்படியாக, ஆவியை பகுத்தறி வதின் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பிரசன்னத்தில் கொண்டுவரும்படியாகவே அது இருக்கிறது. அது வேதாகமத்தில், “அறிவின் வரம் (gift of knowledge)” என்று அழைக்கப்படுகிறது, அதை செய்யும் போது, அவரை ஜனங்களுக்கு முன்பாக பிரத்தியட்சமாக்குகிறது, அப்போது அவர்கள் அவரை தங்களுக்கு சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்கிறார்கள், அதுவே அதைப் பற்றின எல்லா கேள்விகளையும் தீர்த்து வைக்கிறது. 15. ஜனங்களைப் பற்றின மகத்தான சாட்சிகளை கூறவும், புகழ்ந்து விவரித்துக் காட்டும் படியாகவும் என்னிடம் பத்திரிக்கைகள் கிடையாது (magazines), ஆனால் ஒரு கூட்டம் முடிந்த பின்னர் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆயிரக்கணக்கான சாட்சிகள். ஒரு சில வாரங் களுக்கு முன்பு நாங்கள் ஜமைக்காவிலிருந்து போதுமான அளவு சாட்சிகளை கொண்டு வந்திருக்க முடியும், சகோதரன் ஆர்கன் பிரைட், நான்... ஒருவேளை அவர் இங்கே இருக்கலாம், அவரும், சகோதரி ஆர்கன்பிரைட்டும் இங்கே அடிக்கடி வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மேலும் கிறிஸ்தவ வர்த்தக புருஷர்கள் (Christian Businessmen)... அந்த குருடர்கள், செவிடர்கள், சக்கரநாற்காலிகளில் இருந்தவர்கள், முடமானவர்கள், கூன் விழுந்தவர்கள் என அவர்களைப் பற்றின வைகளை நாம் பதிவு செய்திருந்தால், வரவிருக்கின்ற பல வாரங்களுக்கான பத்திரிக்கைகளை (magazines) நம்மால் நிரப்பியிருக்க முடியும். ஆனால் நான் எப்போதுமே ஜனங்களிடம் கூறுவேன், “அதைப் பற்றி ஒன்றுமே சொல்லாதீர்கள், வெறுமனே யாரிடமாவது சென்று கர்த்தர் உங்களுக்கு நல்லவராக இருந்தார் என்று மட்டும் கூறுங்கள்.” அதை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். 16. “சகோதரன் பிரன்ஹாம் இதை செய்கிறார், அதை செய்கிறார்” என்று யாரேனும் கூறுவதை நான் விரும்புவது கிடையாது. தொடக்கத் திலிருந்தே அதில் நான் செய்தது என்று எதுவுமே இல்லை. நான் ஒரு நபரை தொடக்கூட இல்லையென்றால், பின்பு அதில் நான் செய்ததென்று நிச்சயமாக எதுவுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியும், அதை செய்கிறவர்கர்த்தர் தான். 17. என்னவாயினும், என் அமெரிக்க கூட்டங்களில், அதிகமான ஜனங்களுக்கு என்னால் ஜெபிக்க முடியவேண்டு மென்று நான் கர்த்தரிடம் அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டேன், ஏனெனில் நீங்கள் என் நண்பர்களாய் இருக்கிறீர்கள், நீங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்களாயிருக்கிறீர்கள், உங்களுக்கு உதவும்படியாக என்னால் முடிந்த எல்லாவற் றையும் நான் செய்ய விரும்புகிறேன். "18. ""தொடர்புக்கான பொருளாயிருக்கும்படி ஏதாவதொன்றை தொடுங்கள்"" என்று சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் கூறுவதை நான் கவனித்தி ருக்கிறேன். " 19. நல்லது அப்போது நான் சிந்திக்க ஆரம்பித்தேன், “என் சிறு பிள்ளை, அது வியாதியோடோ அல்லது வேறேதோடோ இருந்து நான் அங்கே அதை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் எப்படியிருக்கும், மேலும் அந்த ஆவி (Spirit) ஒரு நபரில் கிரியை செய்வதை நான் பார்க்கும்போது அந்த நபர் என் மீது கைகளை வைக்க வேண்டும் என்பது அநேகமாக ஒருவேளை அது என் விசுவாசமாயிருக்கலாம், அதாவது அந்த நபர் அதை செய்ய வேண்டுமென்பது.” நல்லது, நான் ஜெபித்தேன்... 20. சகோதரன் லின்ட்சேவும், மனிதர்களில் பலரும், “நீங்கள் ஏன் இரண்டு அல்லது மூன்று பேரை மாத்திரம் பகுத்தறிந்து விட்டு, பின்பு தொடர்ந்து சென்று, முழு ஜெப வரிசையையும் முடிக்கக்கூடாது” என்று என்னிடம் கூறுவது வழக்கம். என்னால் அதை ஒருபோதும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நான் அதை ஆரம்பிக்கும் போது, அது என்னை தாக்கியதுமே, நான் அப்படியே... அந்த காரணத்தால் தான் நான் மிகவும் பெலவீனமாகிறேன், அவர்கள் என்னை மேடையைவிட்டு தாங்கியபடி கீழே கூட்டிச் செல்லுகிறார்கள். ஏனெனில் அந்த இரண்டு அல்லது மூன்று தரிசனங்களுக்கு பின்பு, நான் மிகவும் சோர்ந்து போய் விடுகிறேன், நான் - நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்கு தெரிவதே கடினமாயிருக்கும். 21. வேத ஆராய்ச்சியாளர்களாகிய (theologians) நீங்கள் அதை புரிந்துக்கொள்ளுவீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன், வேதாக மத்தின்படி, ஒரு சிறு பெண், கர்த்தராகிய இயேசுவை தொட்டபோது, அவரிலிருந்து வல்லமை புறப்பட்டதை அவர் உணர்ந்தார்); தானியேலுக்கு ஒரு தரிசனம் வந்த போது, பல வாரங்களாக அவனுடைய தலையில் அவ னுக்கு அவஸ்தையிருந்தது, நிச்சயமாக என்ன நடக்கிறது என்று நமக்கு தெரியும். "22. சற்று நேரத்திற்கு முன்னர் சகோதரன் டுப்ளெஸ்ஸிஸ் கூறியதை போன்று: “இப்போது இது இந்த அளவுக்கு நடைபெற தேவன் அனுமதிப்பதற்கான காரணம் என்னவென்று நான் விசுவாசிக்கிறேன் என்றால், அவர் கொடுத்த வாக்குத்தத்தமே, ""நான் என் பிதாவினிடத்திற்குப் போகிற படியினால், நான் செய்கிற கிரியைகளை, நான் செய்கிறவைகளை நீங்களும் செய்வீர்கள்; " இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியை களையும் செய்வீர்கள்.” அது அவருடைய தெய்வீக வாக்குத்தத்தமாயிருக்கிறது. ஒரு தரிசனம் எப்போதுமே யாரையும் சுகப் படுத்துவது கிடையாது, தரிசனமானது இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் பிரசன்ன மாயிருக்கிறது என்கின்ற யதார்த்தத்தை மாத்திரமே கொண்டு வருகிறது, பின்பு அதை செய்யும்போது, அது ஜனங்களுக்கு விசுவாசத்தை கொண்டு வருகிறது. 23. எனவே, பீனிக்ஸ், அரிசோனாவில், சில காலத்துக்கு முன்பு, நான் அந்த பாலைவனத்தில் இருந்தேன், சகோதரன் மூரும், சகோதரன் பிரவுனும், நானும் இருந்தோம், அப்போது நான் ஒரு தரிசனத்தை கண்டேன். இந்த தரிசனத்தில் கர்த்தராகிய இயேசு என்னிடம் கூறினார், அல்லது, என்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்த ஒருவர் கூறினார். அவர் ஒரு தூதன் என்று நான் விசுவாசிக்கிறேன், அப்போது நான் சில பாறைக்கு பின்பாக, ஜெபித்துக்கொண்டிருந் தேன், அப்போது அவர், “இது நடப்பதை நீ காணும்போது, அப்போது உன் ஊழியம் மாறும்” என்று கூறினார். நான் பார்த்தபோது, ஒரு பெண் ஒரு மிகச்சிறிய குழந்தையோடு மேடைக்கு வந்துக்கொண்டிருந்தாள், அது மரிக்கும் தருவாயிலிருந்தது, கர்த்தர் அதை குணமாக்கினார். அந்த பெண் வெளிர் நிறமாக, கருத்த கண்களுடன் வெள்ளை நிறத்தில், தோள் வரைக்குமான குட்டையான தலை மயிருடன், ஒரு பழுப்பு நிற கோட் சூட் அணிந்திருந்தாள், அந்த குழந்தை ஒரு சிறு கம்பளியில் சுற்றப்பட்டிருந்தது. இதன் மூலம் நீ அறிந்துக்கொள்ளுவாய்” என்று கூறினார். என் பக்கத்தில் குட்டையான வழுக்கைத்தலை கொண்ட மனிதனும், மேலும் ஒரு உயரமான ஒல்லியான மனிதனும் நின்றிருந்தார்கள். 24. நான்கு வருடங்களாக நான் அதை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன். அது நிறைவேறும் என்று நான் கூறியதை எத்தனை பேர் எப்போதாவது கேட்டிருக்கிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். நல்லது, சற்றே இங்கே பாருங்கள், இன்றிரவு இங்கே இந்த--இந்த ஆலயத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கானோர் அந்த குறிப்பை கேட்டு இருக்கிறார்கள். 25. அதற்காக நான் நான்கு வருடங்கள் காத்திருந்தேன். புது இங்கிலாந்து மாநிலங்களில், ஒரு சில, நல்லது, கடந்த வசந்த காலத்தில், ஏறக்குறைய விவரிக்கப்பட்ட குறிப்பு களுக்கு ஒத்த ஒரு பெண் மேடைக்கு வந்தாள். "அங்கே சகோதரன் காட் இருந்தார், இங்கே என்னுடன் இருக்கும் ஒலிநாடா பையன்களில் (tape boys ஒலிநாட பதிவு செய்பவர்கள்] ஒருவர், கூட்டம் முடிந்த பின்னர், அவர், ""அவள் அந்த பெண் இல்லையா?"" என்று கேட்டார். " "26. நான் கூறினேன். ""இல்லை, சகோதரன் ஜீன், இது அந்த பெண் கிடையாது. அந்தப் பெண் குள்ளமாக இருக்க வேண்டும், ஆனால் இந்த பெண்ணோ உயரமாக இருக்கிறாள், அவளுக்கு பழுப்பு நிற தலைமயிர் இருந்தது, ஆனால் இந்த பெண்ணிற்கோ கருத்த தலை மயிருடன் மயிர் இருக்கும். " அந்த குழந்தை மிகவும் அளவில் சிறியதாயிருந்தது, ஆனால் இவனோ ஒரு சிறிய குட்டிப் பையனாக இருக்கிறான். இது அந்த பெண் கிடையாது, என்னதான் அவள் பழுப்பு நிற கோட் சூட்டை அணிந்திருந்தாலும், அது அவளல்ல.” 27. சிகாகோவில் நடந்த அந்த பெரும் விபத்தை குறித்து உங்களில் அநேகர் கேள்விப் பட்டிருப்பீர்கள், அங்கே ஒரு கத்தோலிக்க பள்ளிக்கூடமும், மிக அதிகமான பிள்ளை களும் முழுவதுமாக எரிந்துபோனார்கள் என்று நான் நினைக்கிறேன். அந்த பிள்ளைகளுக்கான இறுதி சடங்கு பிரசங்கிக்கப்பட்ட அந்த அதே பொதுக் கூட்டத்தில் (armory), கிறிஸ்தவ வர்த்தக புருஷர்கள், முழு சுவிசேஷ கிறிஸ்தவ வர்த்தக புருஷர்கள், ஒரு நினைவுக் கூட்டத்தை நடத்தினார்கள். அந்த மதிய வேளையில் அவர்களுக்காக பேசி, ஜெபத்தை ஏறெடுக்கும் படியாக நான் அழைக்கப் பட்டேன். அந்தக் கூட்டம் முடிந்த பின்னர், அந்த ஜனங்களுக்காக நான் ஜெபித்துவிட்டு, அந்த இரவு மறுபடியும் வந்து வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும் படியாக, என் அறைக்கு சென்றேன். 28. சிகாகோவில் இருந்ததிலேயே மிகமிக மோசமான குடிகாரர்களில் ஒருவள்தான் ரோசெல்லா கிரிப்பின், அங்கே நடந்த என் கூட்டங்களில் ஒன்றில் சுகமானாள். அவள் யார் என்றும் அவள் ஒரு போதைப் பொருள் விற்பவள் (dope peddler) என்றும் கர்த்தர் அவளிடம் கூறினார். ரோசெல்லாகிரிப்பின்னை குறித்து எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்? ஏன் நிச்சயமாக, சுற்றிலும் உயர்த்தப்பட்டிருக்கும் கைகளை பாருங்கள், நிச்சயமாக. மிக மோசமான குடிகாரர்களில் ஒருவள், ஆல்கஹாலிக்ஸ் அனானிமௌஸ் (Alcoholics Anonymous) அவளை கைவிட்டு விட்டார்கள். (Alcoholics Anonymous என்பது குடிகாரர்கள் குடியை நிறுத்தும்படி உதவக்கூடிய ஒரு பொது நிறுவனத்தின் பெயர். "29. அதன்பின் ஃப்ரெட் அஸ்டயரின் நடனத்துணையான (dancing partner) இன்னொரு பெண், அவள் இவளுடன் சேர்ந்து போதை பொருட்களை விற்பாள், அவர்கள் அழைக்கப்பட்டார்கள். உடனே அவளுடைய அப்பா கோபத்துடன் அதை எதிர்க்கும் விதத்தில் எழுந்தார், அவள், ""அப்பா, ஒரு நிமிடம், அந்த மனிதன் கூறுவது சரிதான்"" என்றாள். " 30. எனவே, அந்தக் கூட்டம் முடிந்த பின்னர், ஒரு சின்னஞ்சிறு குழந்தையுடன் ஒரு சீமாட்டி அழுதபடியே கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதை ரோசெல்லா பார்த்தாள். 31. அவள், “சகோதரன் பிரன்ஹாம் என் குழந்தைக்காக ஜெபிப்பார் என்று நான் மிகவும் நம்பிக்கையோடு இருந்தேன்” என்று கூறினாள், அவள், “இதினால் ஜீவிக்க முடியாது. இந்த நகரத்தில் இருக்கும் பல பிரபலமான மருத்துவர்கள் என் குழந்தையை கைவிட்டு விட்டார்கள். அவர் வந்து இதை தன் கைகளில் ஏந்தி, இந்த குழந்தைக்காக ஜெபிப்பார் என்று நான் நிச்சயமாக நினைத்தேன்” என்று கூறினாள். “ஏன்,” “அவர் இன்றிரவு வியாதியஸ் தர்களுக்காக ஜெபிப்பார்” என்று அவள் கூறினாள். 32. அவள், “பிரியமானவளே, என்னால் தொடர்ந்து இங்கே இருக்க முடியாது முடியாது, ஏனெனில் இன்றிரவு நான்... என் கணவன் இன்னும் இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார், எனவே நான் திரும்பி செல்ல வேண்டும்” என்று கூறினாள். “என் ஸ்வீடிஷ் உடன்படிக்கை சபையின் (Swedish Covenant Church) பாஸ்டர்” என்று கூறினாள்... இப்போது, அவர்கள் வார்த்தையை அறிவார்கள், அவர்கள் மிகவும் ஆவிக் குரியவர்கள் அல்ல, ஆனால் தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக் கிறார்கள். "எனவே, “அவர் கூறினார், 'அனைவரும் உன் குழந்தையை கைவிட்டு விட்டாலும், நீ ஏன் அதை கூட்டிச்சென்று, சகோதரன் பிரன்ஹாம் அதற்காக ஜெபிக்கும்படி செய்யக்கூடாது? தேவன் குழந்தையை சுகப்படுத்துவார் என்பதை நான் விசுவாசிக்கிறேன்' என்று கூறினார்."" ஒரு ஸ்வீடிஷ் உடன்படிக்கை சபையை சேர்ந்த வருக்கு அது மிகவும் அருமையாகப் பட்டது. " "33. அவர்கள் குழந்தையை அழைத்துவந்தார்கள். எனவே, அந்த சீமாட்டி, ""நல்லது, என்னால் தொடர்ந்து இங்கே இருக்க முடியாது” என்று கூறினாள். " "34. பெரிய வாயில்காப்போர்களில்(ushers) ஒருவர் கூறினார், ""சீமாட்டியே, உங்கள் கணவனை தொலைபேசியில் அழைக்க வேண்டுமானால், நான் உங்கள் குழந்தையை பிடித்துகொள்கிறேன்."" " 35. அவள் கணவனை அழைத்தாள், அவர், “அன்பே, நீ தொடர்ந்து அங்கே இரு, நான் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினார். "36. எனவே கூறினார், “இப்போது, அந்த பையன் வாசலண்டையில் இருப்பான்,"" ""அவன் இரவில் உள்ளே வரும் போது, நீங்கள் அங்கே மாத்திரம் நின்றிருந்து, ஜெப அட்டையை வாங்கிக்கொள்ளுங்கள், செய்யவேண்டிய ஒரே காரியம் அதுதான்” என்றார். " """நிச்சயமாக, நீங்கள் வரிசையில் அழைக்கப் பட்டாலும் அல்லது அழைக்கப்படா விட்டாலும், நீங்கள் உங்களுடைய சந்தர்ப் பத்துக்கான முயற்சியை எடுக்க வேண்டும்” என்றார். " 37. நல்லது, அந்த சீமாட்டியோடு ரோசெல்லா வாசலண்டையிலே நின்றாள். அந்த குழந்தை யால் அழவே முடியவில்லை. அதின் வாய்க்குள் சென்ற ஒவ்வொரு கைப்பிடி உணவும், உடனே அதை விட்டு வெளியே வந்துவிட்டது, அவர்களால் அதில் கொஞ்சத்தை கூட கட்டாயப் படுத்தி உள்ளே அனுப்ப முடியவில்லை. நரம்புகள் மற்றும் அது போன்றவற்றின் மூலமாக அதை கொடுத்தார்கள், அது அப்படியே மரித்துக்கொண்டிருந்தது, எனவே அவர்கள், ஐந்து அல்லது ஏழு மருத்துவர்கள் அதனை கைவிட்டு விட்டார்கள். அடுத்த கொஞ்ச நாட்களை தவிர அந்த சிறு குட்டிப்பையன் உயிர் வாழ வேறு வழியே இல்லை, அழ கூட முடியவில்லை. 38. என் மகன், பில்லி உள்ளே வந்த போது, “பில்லி, நீ ஜெப அட்டைகளை கொடுக்கப் போகிறாயா?' என்று ரோசெல்லா கேட்டாள். “ஆம்” என்றான். அவள், “நல்லது, இந்த சீமாட்டிக்கு ஒன்றை கொடு” என்றாள். “நான் ஜனக்கூட்டத்திற்கு முன்பாக சென்று, அவை களை கலக்காதவரைக்கும் கொடுக்க மாட்டேன்” என்று கூறினான். எனவே, அவன் அவைகளை கலக்கிவிட்டு, ஒன்றை எடுத்து அந்த சீமாட்டிக்கு கொடுத்துவிட்டு, முன்னேறி சென்றான். "39. அந்த இரவு நான் உள்ளே வந்தபோது, நான் அழைத்த போது, அந்த பெண் சரியாக வரிசையில் நான்காவது நபராக நின்றிருந்தாள். அதை பற்றி இன்னும் யாருக்குமே தெரிய வில்லை. மேலும் ஒவ்வொரு முறையும், ஜனங்கள் வரும் போது, நான் அவர்களிடம் கூறுவேன், ""நான் உங்களை இதற்கு முன்பாக பார்த்ததில்லை. " நாம் பார்த்திருக்கிறோமா?” அதை தெரிந்துக் கொள்ளுவேன். அவள் மேடைக்கு வருவதை நான் பார்த்தபோது, அந்த தரிசனத்தை நான் கண்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் மிகவும் கவனத்தை ஈர்க்கக்கூடிய, சிறு சீமாட்டி, குழந்தையை வைத்துகொண்டிருந்தாள். “நான், எனக்கு அந்த சீமாட்டியை தெரிந்தது போன்றிருக்கிறதே” என்று நான் நினைத்தேன். அவள் என் பக்கத்தில் நடந்து வந்தபோது, அவள் அந்த சிறுவனை வைத்துக் கொண்டிருந்தாள், நான், “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன் "அவளும்,""எப்படி இருக்கிறீர்கள்?"" என்று கேட்டாள். " 40. தரிசனமானது திறக்கப்பட்டது, நான், “உங்களுடைய பெயர் இது - இன்னார்”, என்று அது என்னவோ அதை கூறினேன். “குழந்தை மரித்துக்கொண்டிருப்பதால், உங்களுடைய பாஸ்டர் அதை அழைத்துகொண்டுவரும்படியாக உங்களுக்கு அறிவுரை கொடுத்தார்” என்றேன். “ஐயா, அது உண்மை” என்று அவள் கூறினாள். நான், “இந்த குழந்தைக்கு வயது ஆறு மாதங்கள் மேலும் மூன்று பவுண்டுகள் எடையுடன் இருக்கிறது” என்றேன். அவள், “அது சரி” என்றாள். நான், “குழந்தைக்கு நீங்கள் எதை ஊட்டுகிறீர்களோ, அதை கட்டாயப்படுத்தி உள்ளே தள்ளுகிறீர்கள், அது குழந்தைக்குள் தங்குவதில்லை, அது என்னவென்று மருத்துவர் களால் கண்டு பிடிக்க முடியவில்லை” என்றேன். "அவள், “ஐயா, அது சரி"" என்று கூறினாள். " அந்த சிறு குழந்தை சிரிப்பதையும், குதிப்பதையும், சிறு குழந்தை விளையாடு வதையும் நான் கண்டேன், “கர்த்தர் உரைக்கிறதாவது: கர்த்தர் உன் குழந்தையை சுகப்படுத்தி விட்டார்” என்று நான் கூறினேன். 41. அவள் மிகவும் அழ ஆரம்பித்தாள். “அந்த பெண்ணைப் பற்றி ஏதோவொன்று விநோத மாயுள்ளதே” என்று நான் எண்ணினேன். 42. அப்போது பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசி, “அவளை உனக்கு ஞாபகம் இல்லையா, அந்த பழுப்பு நிற கோட்?” என்று கூறினார். ஓ, அது அங்கே இருந்தது, ஊழியத்தின் அந்த மாற்றம், சரியாக அங்கேயே நடந்தது. 43. நான் என் மனைவியை தேடினேன், அந்த திரளான ஜனக்கூட்டத்தில் என்னால் அவளை காண முடியவில்லை, நான் பில்லி பாலை தேடினேன், என்னால் அவனை காண முடியவில்லை, அதைப்பற்றி சொல்லும்படி ஜீன், லியோ என்று யாரையுமே என்னால் காண முடியவில்லை. எனவே, அந்த கூட்டத்திலிருந்து அந்த இரவு நான் வெளியே சென்றபோது, அது சரியாக அங்கே ஆரம்பித்தது, என்னால் தரிசனத்தை கண்டு, அதைவிட்டு உடனே வெளியே வந்து, அப்படியே தொடர்ந்து, ஜனங்களின் முழு வரிசைக்கும் ஜெபிக்க முடியும், பின்பு அநேகமாக இன்னொரு தரிசனம் வரலாம், கர்த்தர் எப்படி வழி நடத்துகிறாரோ அது போன்று, எனவே அது சரியாக அந்த இடத்தில் அந்த மேடையின் மீது அந்த நிமிடத்திலிருந்து மாறியது. 44. ஒரு தரிசனத்தை காணும்படி எப்படி என்னை நான் ஒரு நிலைக்குள் வைத்துக் கொள்கிறேனோ அதேப்போல இப்போது எனக்கு ஒரு வழியிருக்கிறது, நான் தரிசனத் திற்குள் எப்படி சுலபமாக செல்கிறேனோ அதே போல சுலபமாக என்னால் அதைவிட்டு வெளியே வர முடியும். ஆகவே இப்போது என்னால் முழு ஜெப வரிசைக்கும் தரிசனம் இல்லாமலே ஜெபிக்க முடியும். கர்த்தர் யாருடைய ஜீவியத்திலாவது ஏதேனும் பாவத்தையோ அல்லது மற்றதையோ கண்டு, அது வெளிப்படுத்தப்பட வேண்டிய தாயிருந்தால், அல்லது யாரேனும் விசுவாசத்தில் மிகவும் பலவீனமாக இருந்தால், அல்லது -- அல்லது அதுபோன்ற ஏதோவொன்றுடன் இருந்தால், அப்போது அவர் அந்த நபரை நிறுத்தி, அவர்களிடம் இன்ன பிற காரியங்களையும் மற்றும் இதையும் அதையும் கூறுவார். அப்படியே தொடர்ந்து சென்று, அதை விட்டு உடனே மீண்டும் வெளியே வந்து, தொடர்ந்து செல்ல முடியும், என்னால் ஜெபவரிசையில் அவ்வாறு நின்றுகொண்டே, நின்றுகொண்டே, நின்று கொண்டே இருக்க முடியும். ஆதலால், அதற்காக நான் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் என் ஊழியத்தில் நிச்சயமாக அது ஏதோவொன்றை செய்திருக்கிறது. ஆகவே பின்பு, தரிசனங்கள் அப்படியே தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. 45. தேவனுடைய இராஜாதிபத்தியத்தை, ஜனங்களுடைய விண்ணப்பங்களை சந்திக்க அவர் எவ்வளவாய் விரும்புகிறார் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் அடிக்கடி கூறுவதைப் போல, “தேவன் நல்ல தேவனாயிருக்கிறார்.” அது உண்மை. 46. அந்த மனிதன் இங்கே இருக்கலாம்... ஒரு நிமிடம், நான் மிக அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறேன், நான் - நான் பிரசங்கிக்க போவதில்லை, நான் இன்னும் ஒரு நிமிடத்தில் ஜெப வரிசையை அழைக்கபோகிறேன். 47. எனக்கு சில நல்ல நண்பர்களிருக்கிறார்கள், பல நூற்றுக் கணக்கான நல்ல நண்பர்கள் கலிபோர்னியாவில் இருக்கிறார்கள். அதில் நல்ல நெருக்கமான ஒரு நபரும், அவரின் மனைவியும் எனக்கு மிகவும் குறிப்பிடத்தக்க நண்பராய் இருக்கிறார்கள், அது மைனர் ஆர்கன்பிரைட்டும் அவருடைய மனைவியுமே, அவர்கள் மிகவும் இனிமையான ஜனங்கள். நான் அதை கூறுவதற்கு முன்னர், முதலில் அவர் இங்கே இருக்கிறாரா என்று கண்டுக்கொள்ள நான் சுற்றும் முற்றும் பார்த்தேன், அவர் இங்கே இருப்பது போன்று எனக்கு தோன்றவில்லை, எனவே என்னால் அதை கூற முடியும். அவருடைய வீடு எப்போதுமே என் வீடாயிருந்து வருகிறது, என் வீட்டில் எப்படி வரவேற்கப்படுவேனோ அதுபோலவே வர வேற்கப் படுவேன். நாங்கள் ஒன்றாக வெளி நாடுகளுக்கு சென்றிருக்கிறோம், மலைகளில் ஒன்றாக இருந்திருக்கிறோம், நான் அவரை ஒரு நல்ல மனிதனாக காண்கிறேன். 48. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, நான் இங்கே கலிபோர்னியாவில் இருந்தபோது அவருடைய வீட்டில் தங்கியிருந்தேன், அந்த இரவு நான் ஏஞ்சலஸ் டெம்பிளில் (Angelus Temple) இருந்தேன். அடுத்த நாள் காலையில், நான் சகோதரன் விக்ஸ் அவர்களின் சபையிலிருந்தேன் என்று நான் நம்புகிறேன், ஒரே ஒரு சிறு இரவு மாத்திரமே இருந்தது, இங்கே இருக்கிறதான மேற்கு கடற்கரையில், திட்டமிடப்படாத சிறு குறுகிய கூட்டங்களை (jump meeting) நடத்தினேன். தொலை பேசியானது ஒலிக்கும், நிச்சயமாக... 49. நண்பர்களே, விஷயம் என்னவென்றால்; ஜனங்கள் அழைக்கிறார்கள் தனிப்பட்ட (private)..... நல்லது, தங்களால் தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சனைகளோடு இருக்கும் ஜனங்களுக்காக, வழக்கமாக, கூட்டங்களில், நாங்கள் தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்திருப்போம், அவர்கள் உள்ளே வரு வார்கள், நாங்கள் ஜெபிப்போம். அப்பொழுது கர்த்தர் ஒரு தரிசனத்தை காண்பிப்பார், தங்கள் பிரச்சனை என்ன வென்பதை அவர்கள் என்னிடம் கூற மாட்டார்கள், ஆனால் கர்த்தர் அதை வெளிப்படுத்தி, அவர்களிடம் கூறி, அவர்களை சரிப்படுத்துவார். அந்த வரங்களெல்லாம் அதற்காகத்தான் இருக்கிறது. எனவே, வழக்கமாக கூட்டங்களில், அதற்காகவே, இந்த காரியங்களுக்காகவே, நாங்கள் தனியாக நேரத்தை ஒதுக்கி வைத்திருக்கிறோம். 50. ஆனால், இந்த முறையோ நான் அடுத்தடுத்து சென்ற படியும் துரிதமாகவும் இருந்தேன். எங்களால் வெளியே சென்று தனிப்பட்ட அழைப்புகளை ஏற்படுத்த முடிய வில்லை. ஏனெனில் ஒருவருக்கு அப்படி கிடைத்து இன்னொருவருக்கு கிடைக்கவில்லை யென்றால் அது நியாயமாக இருக்காது; மேலும் அவர்களுக்கு அது கிடைத்துவிட்டால், அவர்களை அவர்கள் சபைக்கும், மற்ற வற்றிற்க்கும் அழைத்து வரமாட்டார்கள், அது எவ்வாறு நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும். மேலும் நாங்கள் விசுவாசத்தில் பெந்தெகொஸ் தேயினராய் இருப்பதால், பெந்தெ கொஸ்தே சபைக்குள் அவர்களை அழைத்து வரு வது என்பது தங்களுடைய தங்களுடைய கௌரவத்தை கெடுத்துவிடும் என்று சில ஜனங்கள் நினைக்கிறார்கள். 51. அவர்கள் அந்த விதத்தில் நினைத்தால், என்னவாயினும் நான் அங்கே செல்லும்போது மட்டும்தான் கர்த்தர் அதை அவர்களுக்கு சொல்லுவார். எனவே நீங்கள் - நீங்கள் உங்களை தாழ்த்தி, தேவன் எங்கேயிருந்தாலும் அங்கே வந்து அவரை சந்திக்கும்படியாக விருப்பம் கொண்டிருக்க வேண்டும். பரலோ கத்தில் அநேக பெந்தெகொஸ்தே ஜனங்களை பார்க்கப்போகிறீர்கள், எனவே சரியாக இப் போதே நீங்கள் அவர்களுடன் பழக ஆரம்பிப்பது நல்லது. 52. எனவே அப்பொழுது, தொலைபேசி ஒலித்தபோது, சகோதரன் ஆர்கன்பிரைட் வீட்டிற்கு வெளியே இருந்தார் அல்லது, அறைக்கு வெளியே இருந்தார், நான் தொலை பேசியை எடுத்து பதிலளித்தேன். தொலை பேசியின் மூலமாக, மிகவும் இனிமையான, மென்மையான குரல் வந்து, “மிஸ்டர். ஆர்கன்பிரைட்டா?” என்று கேட்டது. """இப்போது அவர் இங்கே உள்ளே இல்லை"" என்று நான் கூறினேன். " “சகோதரன் பிரன்ஹாம் இங்கே தங்கியிருக்கிறாரா என்று எனக்கு சொல்லு வீர்களா” என்றார். நான், “நான்தான் சகோதரன் பிரன்ஹாம்” என்றேன். அவர், “தேவனுக்கே நன்றிகள்” என்று கூறினார். “இப்போது இது என்னவென்று” நான் நினைத்தேன். 53. அவர், “சகோதரன் பிரன்ஹாமே, நான்” என்றார், அவர் யார் என்பதை என்னிடம் கூறினார், அவர், “எனக்கு ஒரு சிறு பையன் இருக்கிறான் அவன் மரித்துக்கொண்டிருக்கி றான், புற்றுநோய் அவனை மிகவும் மோசமாக அரித்து விட்டது, அவனுக்கு சுமார்,” பிறந்து மூன்று மாதங்களோ, நான்கு மாதங்களோ ஆகியிருந்தது என்று நான் நம்புகிறேன், “இதுவரை அவன் ஒரு வாய் அளவு உணவை கூட, அல்லது-அல்லது பாலையோ, அல்லது எதையுமே அவன் விழுங்கியதில்லை, அந்த புற்றுநோய் அவனை முழுவது மாக அரித்துவிட்டது. நீங்கள் வந்து அவனுக்காக ஜெபிப்பீர்களா?” என்று கேட்டார். "54. ""...போது, சில தினங்களுக்கு முன்புதான் கர்த்தர் என்னிடம் பேசி, 'சகோதரன் பிரன்ஹாமை அழைத்துவா” என்று கூறினார். “நான்,” என்றார், அவர் மெக்சிகோவில் ஒரு மிஷனரியாக இருக்கிறார், ஆனால் இங்கே லா கிரசென்டாவில் வசித்துவருகிறார். " "அவர், “உங்களை அழைத்து வரும்படியாக கர்த்தர் என்னிடம் பேசினார், ஆனால் நீங்களோ சமீபத்தில் ஆப்பிரிக்காவில், தெற்கு ஆப்பிரிக் காவில், மரித்துவிட்டதாக நான் கேள்விப் பட்டேன்,'' என்று கூறினார். மேலும், ""நீங்கள் மரித்து, கடந்துபோய்விட்டப் பிறகு, கர்த்தர் ஏன் என்னை உங்களை அழைக்கும்படியாக கூறுகிறார் என்று நான் நினைத்தேன்” என்றார். " "“பின்பு நீங்கள் இங்கே லா கிரசென்டாவில் இருக்கிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன்,” என்றார். அவர், “அது நிச்சயமாக கர்த்தராகதான் இருக்க வேண்டும்"" என்றார். " நல்லது, அவர் அதை சொல்லிய அதே வேளையில், கர்த்தர் என்னிடம் பேசி, “அவரோடு போ” என்று கூறினார். "நான், ""ஒரு நிமிடம், நான் சகோதரன் ஆர்கன் பிரைட்டை அழைத்து, இந்த மருத்துவமனை எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடிக்கிறேன்” என்றேன். " 55. லாஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் பெரிது, நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து இங்கே என்னை அழைத்து வரவேண்டுமானால் யாராவது எனக்கு - எனக்கு வேண்டும், என்னால் - என்னால் இங்கே வழியை கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்த வேக அளவே இல்லாமல் செல்லக்கூடிய நெடுஞ் சாலைகளில் (freeways), வேகமாக செல்கிறவர்களும், செத்து போகிறவர்களுமே அல்லாமல் வேறு யாருமில்லை, அங்கே சாகிறவர்கள் சடுதியாக செத்துவிடுகிறார்கள், அது அவ்வளவு வேகமாக செல்லக்கூடிய இடமாயிருக்கிறது. நானோ - நானோ ஒரு சாதாரணமான, தெற்கு பகுதியை சேர்ந்தவன், போதுமான அளவுக்கு வேகமாக நகர்ந்து வழி விட முடிவதில்லை. எனவே - எனவே அப்போது, நான் நினைத்தேன், அது அப்படி இருக்கப் போகிறதென்றால்... [ஒரு சகோதரன் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்] ஆமென். தேவனுக்கு நன்றி. “ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுவதை கேளுங்கள்.” ஆயத்தமாயிருங்கள். 56. இதில், இந்த மேற்கோளில், நான் உங்களுக்கு அந்த ஊழியக்காரரின் பெயரை இன்னும் சிறிது நிமிடத்தில் கூறப்போகிறேன். நாங்கள்... நான் சென்றேன், சகோதரன் ஆர்கன் பிரைட்டு என்னை அந்த மருத்துவமனைக்கு, இங்கேயிருக்கிறதான அந்த குழந்தைகள் மருத்துவ மனைக்கு கூட்டிச்சென்றார். நான் பல துயரமான காட்சிகளை பார்த்திருக்கிறேன், ஆனால் அதுபோன்ற ஒன்றை நான் எப்போதும் பார்த்ததில்லை என்று நம்புகிறேன், அது என்னை மிகவும் பாதித்தது. 57. நான் அவரை சந்தித்தபோது... இப்போது, அந்த மனிதன் ஒருவேளை இங்கே உட்கார்ந்திருந்து, நான் பேசுவதை கவனித்துக் கொண்டிருக்கலாம், இருக்கக்கூடும். சற்று நேரத்திற்கு முன்புதான் அவர் என்னை அழைத்து அந்த சாட்சியை என்னிடம் கூறிக்கொண்டிருந்தார். எந்த தரிசனமும் இல்லை, ஏதோவொன்று “போ” என்று கூறினது. நான் அவரை சந்தித்தபோது, அவர் ஒரு மெக்சிக்கன், அவருடைய சிறு மனைவி ஸ்வீடன் நாட்டுப்பெண், பொன்னிற தலைமயிருடன் இருந்தாள், அன்பான இனிய தம்பதிகள், அவள் தன்னுடைய சரக்குகளை வைக்கும் சிறு காரில் (station wagon) உட்கார்ந்திருந்தாள். 58. நாங்கள் உள்ளே சென்றோம், அவரும் நானும் இந்த சிறுவனுக்காக ஜெபிக்கும்படியாக அந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றோம். நாங்கள் அந்த மருத்துவ மனைக்கு நடந்து சென்றபோது, அந்த சிறு குழந்தை, அவன் மிகவும் பரிதபமாக இருந்தான், அவனுடைய தொண்டையிலும் தாடைகளிலும் புற்றுநோய் இருந்தது. அந்த மருத்துவர்கள் அவனுடைய அந்த பிஞ்சு தாடைகளிலும், அவனுடைய பிஞ்சு தொண்டையையும் முழுவதுமாக கிழித்திருந் தார்கள், எனவே அங்கேயிருந்த அந்த பெரியபெரிய தையல்கள் அப்படியே வீங்கிப்போய், உள்ளே சுருங்கிபோய் தடித்திருந்தது (puckered). அந்த குழந்தையின் சிறு நாக்கு வாயிலிருந்து வெளியே வந்து, கருத்துபோகும் அளவுக்கு, அது அந்த புற்றுநோய் என்று அழைக்கபடுகிற அந்த பிசாசை இன்னும் அதிக மோசமாக்கியிருந்தது. அவனால் முடியவில்லை... அது மூக்கின் மூலமாகவும், அவன் வாயின் மூலமாகவும் சுவாசிப்பதை அடைத்துபோட்டு, மூச்சுத் திணறலுடன் மரிக்கவைக்கும் படியாக முயற்சித்து கொண்டிருந்தது. 59. நம்பிக்கைக்குரிய மருத்துவர்கள், அயராது உழைத் தார்கள், அந்த சிறிய - சிறிய ஒன்றை வைக்கும்படியாக, அதை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள் என்று எனக்கு தெரியவில்லை, அதற்காக அவனுடைய தொண்டையில் இங்கே கிழித்து ஒரு ஓட்டையை போட்டு, இங்கே வைத்திருந்தார்கள், அது பார்ப்பதற்கு ஒரு விசிலை போன்று, அவனுடைய தொண்டை யிலிருந்தது. அவனுடைய பிஞ்சு கைகள் அசையாமல் இருக்கும்படியாக அணைவரிக் கட்டையில் (splints) இறுக்கமாக இந்தவிதத் தில் நீட்டியபடி கட்டப்பட்டிருந்தது. அவன் வெறும் ஒரு மூன்று மாத குழந்தைதான். அவனுடைய சிறு தலை பின்னாக இருந்தது, அந்த பச்சிளம்பிள்ளை சுவாசிக்க முயற்சிக்கும் போது அந்த சிறு விசில் சத்தம் கேட்கும், நான் அதைப் பார்த்தேன். அந்த புற்றுநோயில் இருந்து கசியும் அந்த கழிவுகளை அந்த செவிலியர் அகற்ற வேண்டி யிருந்தது, இல்லையென்றால் அது வெளியேறும்போது அது அந்த ஓட்டையில் நின்றுவிடும். 60. அந்த மிக பரிதாபமான தகப்பன் அங்கே பக்கத்தில் சென்று, அவனுடைய தலையில் தொட்டு, “ரிக்கி, அப்பாவின் சின்ன குழந்தையே, அப்பாவின் குட்டி நண்பனே, இதோ அப்பா வந்திருக்கிறேன். உனக்காக ஜெபிக்கும் படியாக நான் சகோதரன் பிரன்ஹாமை அழைத்து வந்திருக்கிறேன்” என்று கூறினார். 61. வெறும் மூன்று மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை, அவனுடைய தலையில் அவர் மெதுவாக தடவிக் கொடுக்கையில் அவரின் கண்களில் கண்ணீர் இருந்தது, அவன் தன் அப்பாவை அடையாளம் கண்டுக்கொண்டான். அப்போது அந்த விசில் சத்தம் மிக அதிகமாக கேட்டது, அவன் அப்படியாக சுவாசித்துக் கொண்டிருக்க, தன் சிறு கைகளை நீட்டினான். "62. நண்பனே, நான் உன்னிடம் கூறுகிறேன், ஏதோ வொன்று என்னை விட்டு சென்றது, நான் - நான் பல காட்சிகளை பார்த்திருக்கிறேன், ஆனால் எனக்கும் கூட பிள்ளைகள் இருக்கிறார்கள், ஒரு சிறு குழந்தை அவஸ்தை யும் பட்டிருக்கிறது. நான் திரும்பி பார்த்தேன், ""அப்பாவின் குட்டி பையனே. அப்பாவின் குட்டி பையனே” என்று கூறி, அவர் அவனை அமைதிப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருந்தார். " 63. நான் திரும்பினேன், என் தலையை இப்படியாக திருப்பி, “கர்த்தராகிய இயேசுவே, ஒரு சிறு அப்பாவியான குழந்தை இவ்வாறு வேதனைப்படுவது உம்முடைய சித்தமல்ல என்பதை நான்-நான் அறிவேன். இது உம்மு டைய சித்தம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நீர் இங்கே நின்றிருந்தால் நீர் என்ன செய்திருப்பீர்? என்ன...? நீர் எந்தவிதமான மனோப்பாங்கை (Attitude) கொண்டிருந்திருப்பீர்?” என்று நான் சிந்தித்தேன். நான் ஒரு மூடபக்தி வைராக்கியம் கொண்டவனல்ல, மேலும் நான் எதையும் தவறாக வியாக்கியானம் செய்யவில்லை என்று நான் நம்புகிறேன், நான் சரியாகதான் கூறுகிறேனா இல்லையா என்பதை தேவன் அறிவார். ஏதோவொன்று என்னிடம் கூறியது, ஒரு குரலல்ல, ஆனால் எனக்குள் இருக்கும் ஏதோவொன்று “நீ என்ன செய்யப்போகிறாய் என்பதை காண நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்” என்று கூறியது. 64. அது என்னிடம் பேசியது மாதிரியே நான் திரும்பி, “அது சரி. உம்முடைய கிரியைகளை தொடர்ந்து செய்யும் படியாக உம்முடைய சபைக்கு நீர் கட்டளை கொடுத்திருக்கிறீர்” என்று நினைத்தேன். எனவே என் கையை நீட்டி, அவனுடைய பிஞ்சு கையை அந்த கட்டிலிருந்து தூக்கி, இந்த விதமாக அவனுடைய பிஞ்சு விரல்களை பிடித்துக் கொண்டு, “பரலோக பிதாவே, என்னால் இதற்கு மேல் இதை பொறுத்துக்கொள்ளவே முடியாத அளவுக்கு இது மிகவும் பாதிப்படைய செய்கிறது. என் ஜெபத்தை கேட்டருளும், ஓ தேவனே, தூதன் மூலமாக எனக்கு அளிக்கப்பட்ட தேவனுடைய கட்டளையின் மூலமாக, இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் மிகவும் கடினமாக எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறதான இந்த புற்று நோய் பிசாசை நான் கடிந்துக் கொள்கி றேன். இந்த புற்றுநோய்க்கும் இந்த குழந்தையின் ஜீவனுக்கும் இடையே நான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை வைக்கிறேன்” என்று கூறிவிட்டு, நான் நடந்து சென்றேன். 65. அந்த தந்தை அவனுடைய தலையில் மெதுவாக தடவிக்கொடுத்துவிட்டு, வெளியே நடந்து வந்தார், வேறு எதுவுமே கூறவில்லை, தெருவை தாண்டி சென்றார், “அந்த பிள்ளையை குறித்து நீங்கள் இதற்குமேல் கவலைப் படாதீர்கள்” என்று நான் கூறினேன். 66. அந்த தகப்பன் இந்த மதிய வேளையில் என்னை அழைத்துப் பேசினார், வெறும் ஒரு சில மணிநேரங்களில், வீக்கமானது அந்த குழந்தையை விட்டு நீங்கி, அவனுடைய நாக்கு அவன் வாய்க்குள்ளாகவே திரும்பச்சென்று, இயல்பாகிவிட்டது, அடுத்த நாள் காலை வேளையில், அந்த குழந்தை தன் ஜீவியத் திலேயே முதன் முறையாக ஒரு வாய் உணவை விழுங்கியது. அந்த குழந்தை இப்போது வீட்டிலிருக்கிறது, பரிபூரணமான ஆரோக்கியத் துடனும், அந்த பிசாசின் எல்லா வல்லமை யிலிருந்தும் விடுப்பட்டு அது கட்டவிழ்க்கப் பட்டிருக்கிறது. 67. அந்த மனிதனின் பெயர் சங்கை D, பெரிய எழுத்து D-u- p-o-n-s-t-a (டுபோன்ஸ்டா). அவருடைய தொலைபேசி எண் C-H, Churchill 9-2658 லா கிரசென்டாவிலுள்ளது. அந்த சிறு ரிக்கி இன்றிரவு ஒன்பது மாத குழந்தையாக ஜீவித்துக் கொண்டிருக்கிறான், மீண்டுமாக நல்ல, பரிபூரணமான ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக இருக்கிறான், ஏனெனில் இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார். நம் ஆண்டவர், எவ்வளவு அதிசயமானவராயிருக்கிறார்! 68. இந்த சகோதரனை நாளையதினம் நான் அழைக்கலாம் என்று நினைக்கிறேன், அது நன்றாயிருந்தால், இந்த இரவுகளில் ஒன்றில் ரிக்கியை அவர் அழைத்துவரும்படி செய்கிறேன். நீங்கள் அவரை பார்க்கவும், இந்த அதே காரியத்தை அவரும் சாட்சியாக கூறுவதை கேட்கவும் விரும்புகிறீர்களா? இந்த ஊழியக்காரர் இப்போது இங்கே யிருந்தால், நான் வாசித்த அந்த பெயரையுடைய ஊழியக் காரர், ஐயா, உங்கள் கையை நீங்கள் உயர்த்துவீர்களா? நான் இல்லை... 69. அந்த மனிதன் இப்போது இங்கே உட்கார்ந்திருக்கிறார். உங்கள் காலூன்றி நில்லுங்கள். ரிக்கி உங்களுடன் இல்லை, இருக்கிறானா? உங்களுடன் இல்லை. அவனுடைய இந்த சாட்சியை கூறும்படி நீங்கள் அவனை ஒரு இரவு எங்களுக்காக அழைத்து வருவீர்களா? அதற்காக கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். அது நல்லது. 70. “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறி, நாம் தேவ னுக்கு மிகுந்த ஒரு பெரிய துதியை செலுத்துவோமாக. இப்போது நாம் ஜெபிக்கலாம். 71. கர்த்தாவே, அந்த மனிதன் அங்கே நின்றிருந்ததால், அதற்கு விரோதமாக அவர்களால் ஒன்றும் கூற முடியாமற் போயிற்று என்று வேதாகமம் கூறுகிறது. தேவனுடைய கிருபையால், சிறு ரிக்கியினுடைய உயிரை நீர் காப்பாற்றினீர், இன்றிரவு அதை அறிந்துக் கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சிய டைகிறோம். கர்த்தாவே, அவனுடைய சிறு சாட்சியானது உண்மையாகவே ஜனங்களில் நூற்றுக் கணக்காணவர்கள் இரட்சிக்கப் படுவதற்கு காரணமாக இருக்கவேண்டுமென்று, நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, இந்த சுவிசேஷத்திற்கான வெற்றிக்கோப்பை யாக அவனை நாங்கள் உரிமைக்கோருகிறோம். நாளை என்று ஒன்று இருந்தால், அவனுடைய அன்பான அப்பாவுக்கு மிகவும் வயதாகி பிரசங்கிக்க முடியாமல் போகும்போது, கர்த்தாவே, ரிக்கி அந்த பட்டயத்தை எடுத்துக்கொள்ளட்டும். அவனுடைய அப்பா, வார்த்தை யின் பட்டயத்தை எடுத்து அதை ரிக்கியின் கையில் ஒப்புக்கொடுக்கும் நாளை காணும்வரைக்கும் அவன் ஜீவிப்பானாக, அவனுக்கு நீர் ஆவியை (Spriti) தாரும். அவன் ஜீவிக்கப்போகிற காலத்தில், இயேசு கிறிஸ்துவின் மகத்தான ஐசுவரியத்தில் அவன் பிரசங்கிப்பானாக. 72. தேவனாகிய கர்த்தாவே, சிறு ரிக்கியை காப்பாற்றிய அந்த அதே மாறாத தேவன் இங்கே இருக்கிறார் என்றும், இன்றிரவு இந்த கட்டிடத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் அவரால் இரட்சிக்க முடியும் என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ளுமாறு, இன்றிரவு அருள் செய்யும். கர்த்தாவே, அதை அருளும், உம்முடைய நாமம் அறியப்பட்டு, மகிமைப்படுவதாக. எங்களு டைய ஆண்டவர், இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாங்கள் கேட்கிறோம். ஆமென். 73. இப்போது நாம் ஜெப அட்டைகளை அழைக்கப் போகிறோம். (A-க்களா?) A-ஜெப அட்டைகள், ஒன்றாம் எண்ணிலிருந்து தொடங்கி, இந்த பக்கமாக வரிசையில் நில்லுங்கள். A-ஜெப அட்டை, ஒன்றாம் எண், யாரிடம் அது இருக்கிறது? அது A-க்கள் என்று உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? ஜெப அட்டை A, ஒன்றாம் எண், யாரிடம் அது இருக்கிறது? ஓ, இங்கே. சீமாட்டியே, இங்கே வாருங்கள். இரண்டாம் எண், மூன்றாம் எண், நான்காம் எண், ஐந்தாம் எண், ஆறாம் எண், ஏழாம் எண், எட்டாம் எண், அடுத்தடுத்து வரும் எல்லா எண்களும், உங்களுடைய எண்களின் படி அடுத்தடுத்து நில்லுங்கள், யாரேனும் அங்கே சென்று, ஜனங்களை வரிசைப்படுத்த அவர்களுக்கு உதவுவார்கள். ஜெப அட்டைகள் A-க்களை வைத்திருக்கும் அனைவரும், இந்த பக்கமாக வரிசையில் நில்லுங்கள். நாங்கள் ஊழியம் செய்வதில் மகிழ்ச்சியடைவோம். 74. ஜெபவரிசைக்குள் வர முடியாமல் இருக்கும் உங்களில் சிலர், ஜெப அட்டைகளை வைத்திருக்கிறார்கள், அவர்களை முன்னே அழைத்துவருமாறு நான் வாயில்காப்போர் களை கேட்டுக்கொள்கிறேன், எனவே அவர்களுக்காக நம்மால் ஜெபிக்க முடியும். 75. உங்களிடம் ஜெப அட்டைகள் இல்லாமல், நீங்கள் வியாதியாயிருந்து, இயேசு உங்களை சுகப்படுத்த வேண்டுமென்று விரும்பும் நீங்கள் யாவரும், நீங்கள் இந்தக் கட்டிடத்தில் எங்கேயிருந்தாலும் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். 76. என்னை அனுமதியுங்கள், அவர்கள் ஜனங்களை வரிசைப்படுத்திக் கொண்டிருக்கும் போது, நான் உங்களிடம் ஒன்றை கேட்கட்டும், இப்போது நீங்கள் மிகவும் கூர்ந்து கவனியுங்கள்: வேதவாக்கியங்களில், எபிரெயர் நிரூபத்தில், நம்முடைய பலவீனமான உணர்வு களால் தொடக்கூடிய பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்று எழுதப்பட்டிருக்கிறது (நீங்கள்...?). அது உண்மை என்பதை நீங்கள் விசுவா சிக்கிறீர்களா? மேலும் அதோடுக்கூட, அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் என்று அந்த அதே எபிரெயர் நிரூபம் 13:8 கூறுகிறது. அப்படியானால், அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராக இருந்தால், அவர் அதே மாறாத பிரதான ஆசாரியராக இருக்கிறார். அவர் இங்கே பூமியிலிருந்தபோது, ஜனங்களுடைய பலவீனத்தால் நேற்று அவர் தொடப்பட்டார் என்றால், இன்றிரவு அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார், (ரோமர்-8:34) நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசுகிற, பிரதான ஆசாரியராயிருந்தால், அந்த மாறாத அதே பிரதான ஆசாரியரை நாம் இன்றிரவு தொடுவோமானால், அவர் இங்கே பூமியிலிருந்தபோது எவ்விதத்தில் செயல் பட்டாரோ அவ்விதத்திலேயே செயல்படுவார், அவர் செயல்படுவாரல்லவா? 77. வேதாகமத்தில் ஒரு ஸ்திரீ இருந்தாள், கேட்பதன் மூலமாக அவள் இயேசுவை அறிந்துக் கொண்டாள், “விசுவாசம் கேட்பதன் மூலமாக வரும்,' அவளுக்கு இரத்தப்போக்கு பிரச்சன்னை இருந்தது. எனவே அவள், யேசுவை பற்றி கேள்விப்பட்டாள்... 78. ஒரு காலைவேளையில், அது சுமார் ஒரு ஒன்பது மணி என்று நாம் கூறலாம், அந்த கடலானது மிகவும் கொந்தளிப்பாக இருந்தது... அவர்கள் ஜனங்களை அந்த வரிசையில் வரிசைப் படுத்திக் கொண்டிருக்கும்போது உங்களுடைய கவனத்தை பெற்றுக் கொள்ளும் படியாக நான் பேசிக் கொண்டிருக்கிறேன். எனவே, அது ஒரு கொந்தளிப்பான இரவாக இருந்தது, அந்த ஏரியை கடந்து வரும்போது, வெறும் ஒரு சில மீனவர்களோடும், துடுப்பு போடுகிறவர்களோடும் இருந்த அந்த சிறு கப்பலானது அலைகழிக்கப் பட்டிருந்தது, கலிலேயாவில் புயல்காற்றாயிருந்தது. காலை சுமார் ஒன்பது மணிக்கு, வில்லோ மரங்கள் அப்படியே விலக, அந்த சிறு படகு, அந்த - அந்த கரைக்கு முன்னேறி வந்தது. ஜனங்கள், “இதோ அந்த தீர்க்கதரிசி வருகிறார்” என்று கூற ஆரம்பித்தார்கள், சிலர், “அவன் வஞ்சகன்!” என்று கூறினார்கள். 79. கிறிஸ்து எங்கேயிருக்கிறாரோ, அங்கே எப்போதுமே பல்வேறுவிதமான ஜனங்கள் கலந்திருக்கும் ஒரு திரள் கூட்டமிருக்கும். அவர் - அவர் பன்னிரெண்டு பேரை தெரிந்துக் கொண்டார், அதில் ஒருவன் யூதாஸாயிருந்தான். மோசே எகிப்தை விட்டு வெளியே சென்றபோது, பல்வேறுவிதமான ஜனங்கள் கலந்திருக்கிற ஒரு கூட்டம் அவனோடு கூட சென்றது. இயற்கைக்கு மேம்பட்டது எங்கே செய்யப்படுகிறதோ, அங்கே எப்போதுமே நன்மையானதுமிருக்கிறது தீமையானதுமிருக் கிறது. 80. இப்போது, அதில், மலையின் மீது ஒரு சிறு பெண் இருந்தாள், ஒருவேளை அவள் தன் ஜீவியத்தில் சேர்த்து வைத்த அனைத்தையும் செலவழித்திருக்கலாம், இரத்தப் போக்கு பிரச்சனைக்கான தீர்வை பெறும்படி மருத்துவர் களிடம் முயற்சி செய்து கொண்டிருந்தாள், அவளுக்கு அது அது பல ஆண்டுகளாக இருந்தது. எனவே, அவர் வருவதை அவள் பார்த்தபோது, அவள் தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள், “ஜனங்கள் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, அந்த அந்த மனிதன்தான் தேவனுடைய குமாரன் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.” பெலவீன மாக, இரத்தப்பற்றாக் குறையானது, பெலவீனப் படுத்திக் கொண்டிருக்கையில், அந்த கூட்டத்தி னூடாக அவள்கஷ்ட பட்டு உந்தித்தள்ளி சென்றுக்கொண்டிருந்தாள், இறுதியாக அவர் எங்கேயிருந்தாரோ அவள் அங்கே சென்று விட்டாள், அவர்களில் சிலரை நெருக்கி. தள்ளிக்கொண்டு, தன்னுடைய வழியில் அவள் முன்னேறி செல்ல வேண்டியிருந்தது. 81. நீ எப்போதாவது கிறிஸ்துவை அடைய விரும்பினால், உன்னுடைய பாதையில் நீ கஷ்டப்பட்டு உந்தித்தள்ளி அவரிடம் செல்ல வேண்டும், 'ஏனெனில் உன்னை பின்னாகவே பிடித்து வைத்துக்கொள்ளுமாறு முயற்சிக்கப் போகிற பல்வேறுப்பட்ட ஜனங்கள் இருக்கப்போகிறார்கள். 82. ஆனால் அவள் உறுதியாயிருந்தாள், அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொடுகிற வரைக்கும், அவள் தன் பாதையில் கடினமாக உந்தித்தள்ளி சென்றாள், அவள் அவரை தொட்டபோது, ஜனங்கள் இருந்த அந்த ஜனக் கூட்டத்திற்குள் பின்னாக சென்று, அவள் நின்று கொண்டாள். ஆனால் இயேசுவோ, அந்த தொடுதலை உணர்ந்தபோது, அவர் திரும்பி, அவர், “என்னை தொட்டது யார்?” என்று கேட்டார். அவர்கள் அனைவரும் அதை மறுத்தார்கள்; அவளும் அதை மறுத்தாள், ஏனெனில் அவள் பயந்திருந்தாள். பேதுரு அவரை கடிந்துக்கொள்ள விரும்பினான், அவன், “நீர் ஏன் இப்படிப்பட்ட காரியத்தை சொல்லுகிறீர்? ஏன், முழு ஜனக்கூட்டமே உம்மை தொட்டுக்கொண்டு இருக்கிறார்கள், உம்மை நெருக்கிகொண்டிருக்கிறார்கள்” என்று கூறினான். 83. ஆனால் அவர், “என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை நான் உணருகிறேன்” என்று கூறினார். அவருடைய பெலன் அவரை விட்டு சென்றதால், அது அவரை பெலவீனப் படுத்தியது. அந்த பெண் எங்கேயிருக்கிறாளோ அவளை கண்டுபிடிக்கும் வரை அவர் அந்த ஜனக்கூட்டத்தில் சுற்றிமுற்றி பார்த்தார், அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்தது என்று அவளுடைய நிலைமையை குறித்து அவர் கூறினார். 84. இப்போது, கடந்து சென்ற நாட்களில், அவர் இங்கே பூமியிலிருந்தபோது, அந்த பிரதான ஆசாரியர் அந்த விதத்தில் தான் செயல்பட்டார். இன்றிரவு அவர் அதே மாறாத பிரதான ஆசாரியராக இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் அவரை தொடுவது மட்டும் தான், எனவே அந்தவிதமான தொடுதலோடு நீங்கள் அவரை தொட்டால், அவர் அப்போது எப்படி செயல் பட்டாரோ அப்படியே மாறாமல் செயல்படுவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக, அவர் செய்வார். 85. இப்போது, இதுதான் அதை செய்தது: இப்போது, நாம் ஆவியை (Spirit) அளவோடு பெற்றிருக்கிறோம், கிறிஸ்துவோ அதை அளவே இல்லாமல் பெற்றிருந்தார். உதாரணமாக, சமுத்திரத்திலிருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுக் கப்பட்ட தண்ணீரைப்போல நாம் இருக்கிறோம், அவர் அந்த முழு சமுத்திரத்தையே கொண்டி ருந்தார், ஆனால் அந்த - அந்த ஸ்பூனில் இருக்கும் அதே இரசாயனங்கள்தான் அந்த முழு சமுத்திரத்திலும் இருக்கிறது, ஆனால் அந்த அளவுக்கு இல்லை. 86. ஒரு கிறிஸ்தவன் அப்படிதான் இருக்கிறான், அவருடன் ஒப்பிடப்படுவதற்கு நாம் ஒன்றுமே இல்லை, ஆனால் அவருடைய ஆவியின் ஒரு பாகத்தை நம்மில் கொண்டிருக்கிறோம், அப்படியானால் அது அவரைப்போலவே நடந்து கொள்ளும். அதுதான் நாம் ஜனங்களை நேசிக்கும்படியாக செய்கிறது, மேலும் ஜனங்களுக்கு உதவவும், நன்மை செய்யவும் முயற்சிக்க வைக்கிறது, ஏனெனில் அந்த கிறிஸ்துவின் ஆவி நம்மில் இருக்கிறது. 87. இப்போது, தேவன் தன்னுடைய வரத்தை பயன்படுத்த விரும்பியபோது, அவர் இயேசுவை வெளியே அழைத்து சென்று, “குமாரனே” என்று இப்படியாக கூறினார்: “உன்னுடைய நண்பன், லாசரு வியாதிப்பட்டு மரிக்கப் போகிறான், உன் மூலமாக அவனை நான் எழுப்பப்போகிறேன். நீ விலகி சென்று, நான்கு நாட்கள் தள்ளியிருக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன்.' 88. அவர் திரும்பி வந்து, லாசருவை எழுப்பியபோது, இயேசு அதைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை, பெலவீனப் படுவதை குறித்து ஒன்றுமே கூறவில்லை, அவர்கூறினாரா? நான்கு நாட்களாக மரித்துகிடந்த ஒரு மனிதனை அவர் எழுப்பினார். ஏன்? தேவன் தன்னுடைய சொந்த வரத்தை பயன்படுத்திக்கொண்டிருந்தார். 89. ஆனால் இரத்தப்போக்கு பிரச்சனைகொண்ட ஒரு சிறு பெண் அவரை தொட்டபோது, அவர், “நான் பெலவீனமானேன்” என்று கூறினார். அது என்னவாயிருந்தது? அது அந்த பெண் தேவனுடைய வரத்தை பயன்படுத்தியதாக இருந்தது. பாருங்கள், அவள் அவரை தொட்டபோது இயேசுவுக்கு அவளை பற்றின எந்தவொரு தரிசனமுமே வரவில்லை, ஆனால் ஏதோவொன்று சம்பவித்தது என்பதை அவள் அறிந்துகொண்டாள், ஏதோவொன்று சம்ப வித்தது என்பதை அவரும் அறிந்துகொண்டார். பாருங்கள், அந்த பெண் தேவனுடைய வல்லமையை தேவனுடைய குமாரனின் மூலமாக இழுத்துக் கொண்டாள், அந்த காரணத்தால் தான் அந்த சிறு சுகமளித்தலில் அவர் பெலவீனமானார், ஆனால் பெரிய அற்புதங்களில், பிதா அவருக்கு காண்பித்த வைகளில், அவர் பெலவீனமாகவில்லை ஏனெனில் தேவன் தன்னுடைய வரத்தை பயன்படுத்தினார், அந்த பெண்ணோ அவருடைய வரத்தை பயன்படுத்தினாள், அதுதான் வித்தியாசம். 90. இப்போது, நீங்கள் தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், எதையும் சந்தேகப்படாமல், நீங்கள் ஒவ்வொரு வரும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். "91. ஜெப அட்டை இல்லாதவர்களே, நீங்கள் இந்தப்பக்கமாக பார்த்து, ""கர்த்தாவே, இன்றிரவு என்னால் ஜெப வரிசைக்கு வரமுடியவில்லை. ஆனால் உம்முடைய வஸ்திரத்தை மாத்திரம் தொடும்படி என்னை அனுமதித்தால், அனுமதித்தால் மேலும்..., அங்கே மேலே இருக்கும் மனிதனின் மூலமாக உம்முடைய சத்தம்தான் பேசிக் கொண்டிருக்கிறதென்றால், அவருக்கு என்னை தெரியாது என்று எனக்கு தெரியும், கர்த்தாவே, அது நீராக இருந்தால், பின்பு அவர் திரும்பி என் பிரச்சனை என்னவென்பதை என்னிடம் கூற அனுமதியும்.” என்று கூறுங்கள். பின்பு அவர் அந்த அதே மாறாத பிரதான ஆசாரியரா இல்லையா என்பதை கண்டுக்கொள்ளுங்கள். " 92. இப்போது, வரிசை முழுவதுமாக, நாம் விளையாடிக் கொண்டிருக்கவில்லை, அல்லது பிரசங்கிக்கவில்லை, அல்லது தரிசனங்களை குறித்து பேசவில்லை. உங்களில் ஒவ்வொ ருவரும் இதை நினைவில்கொள்ளவேண்டும்: அதாவது கர்த்தருடைய தூதன், என்னை ஆரம்பத்தில் சந்தித்தபோது, தரிசனம் ஜனங்களை சுகப்படுத்துவதற்காக அல்ல, வியாதிப்பட்ட ஜனங்களுக்காக ஜெபிக்கும்படியா கவே நான் பிறந்தேன் என்று அவர் கூறினார்: “அவர்கள் உன்னை விசுவாசிக்கும்படி உன்னால் செய்யமுடிந்து, நீ ஜெபிக்கும்போது உத்தமமாக இருந்தால், உன் ஜெபத்திற்கு முன்பாக ஒன்றுமே நிற்க முடியாது.” எத்தனை பேர் அதை வாசித்திருக்கிறீர்கள், அதை கேள்விப் பட்டிருக்கிறீர்கள்? “ஜனங்களுக்காக ஜெபி” என்பதுதான் அந்த கட்டளையாக இருக்கிறது (commission). 93. அந்த மோசமான துரித வரிசை போன்று நான் ஒருபோதும் செய்ததில்லை, ஜனங்களின் மீது அவர்கள் கைகளை வைத்து, அடுத்தடுத்து வேகமாக மாற்றி மாற்றி அப்படியாக வைப்பது, அது ஜனங்களுக்காக ஜெபிப் பதல்ல, என்னால் அதை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. “ஜனங்க ளுக்காக ஜெபி.” 94. இப்போது, அப்படியானால் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இங்கேயிருந்து, பின்பு நாம் ஜெபித்து, தேவனிடம் கேட்டு, அதன்பின் உங்கள் மீது கைகளை வைத்து, நீங்கள் கடந்து செல்லும்போது உங்களுக்காக ஜெபித்தால், நீங்கள் சுகமாகிவிடுவீர்கள் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? இப்போது இங்கே ஜெப வரிசையில் இருக்கும் நீங்கள் எல்லாரும், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்போது அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். 95. சிறு ரிக்கி செய்ததை போல. அந்த சிறு பிள்ளைக்கு தரிசனத்தை பற்றி என்ன தெரியும்? அவனுடைய அப்பா தரிசனத்தை பற்றி ஒன்றையுமே கேட்கவில்லை, அவர் ஒன்றையுமே கேட்கவில்லை, அவரிடம் நானும் ஒன்றையுமே கூறவில்லை, நான் அப்படியே சென்று, ரிக்கியின் மீது என் கைகளை வைத்தேன். அது உண்மை, சகோதரனே, ஆம் தானே? அது சரி. ரிக்கியும் சுகமடைந்தான், ஏனெனில் நாம் ஏறெடுத்த ஜெபத்தில் அந்த தகப்பன் வைத்த விசுவாசத்தை இயேசு கிறிஸ்து கனப்படுத்தி, அவருடைய சிறு பையனை குணமாக்கி, அவனை அவரிடம் உயிரோடு மீண்டும் கொடுத்தார். அதற்காக தேவனுக்கே நன்றிகள்! எல்லாம் சரி. 96. இப்போது, நீங்கள் அங்கே மேலே வந்தால், பில்லி, ஜனங்கள் மேலே வரும்படி உதவி செய். இப்போது, அவர்கள் மேலே வரமுடியாத அளவுக்கு மிகவும் முடமாக இருந்து, மேலும் அவர்கள் ஜெப அட்டையை வைத்துக் கொண்டிருந்தால், அவர்களை நாம் இங்கே கீழே இருக்க வைக்கலாம் எனவே என்னால் அவர்களிடம் வர முடியும். 97. இப்போது, யாருமே இப்போது எந்தவி தத்திலும் அவ சரப்படாமல் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், நாம் கர்த்தருடைய சேவையிலிருக்கிறோம். இப் போது, அது அதை மிகவும் கடினமாக்கி விடுகிறது, ஏனெனில் சில நேரங்களில் வியாதிப்பட்ட ஜனங்களுக்காக ஜெபிக்கும்படி நான் அரங்குகளுக்கும், மற்றவைகளுக்கும் செல்லும்போது, அவர்கள், நல்லது, அவர்கள் அப்போது தான் என்னை பேசும்படி மேடைக்கு அழைப்பார்கள், நான் பன்னிரெண்டு மணிக்கு முன்பாகவே முடித்துவிட்டால், தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று அவர்கள் நினைப்பார் கள். ஆனால் நான் இங்கே கலிபோர்னியாவிற்கு வரும் போது, நீங்கள் எல்லாரும் எட்டு-முப்பதுக்கு வீட்டிற்கு செல்வீர்கள் என்பது எனக்கு புரிகிறது, எனவே என்னோடு இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள். 98. பவுல் இந்த இதே சுவிசேஷத்தை இரவு முழுவதும் பிரசங்கித்தான், யாரோ ஒருவன் மாடியிலிருக்கும் ஜன்னலின் வழியாய் கீழே விழுந்து இறந்துவிட்டான், பவுல் தன் சரீரத்தை அவன் மீது வைத்தான், அவன் மீண்டும் ஜீவனுக்கு வந்தான். "99. நம்மில் அநேகர் விழித்திருந்து இரவு நேர நிகழ்ச்சிகளை பார்க்கிறோம், நாம் நடனங் களுக்கும், விருந்துகளுக்கும் சென்று, முழு இரவும் அங்கேயே தங்கியிருக்கிறோம். ""ஆனால் பிரசங்கியார் ஒரு இருபது நிமிடம் அதிகமாக பிரசங்கித்து விட்டால், நான் மீண்டும் செல்ல மாட்டேன். அதை புரிந்துக் கொள்ளமுடிகிறதா? நம்முடைய இருதயம் தேவனோடு சரியாக இல்லை, நம்முடைய - நம்முடைய ஆத்துமா தேவனைத் தவிர வேறேதோவொன்றினால் போஷிக்கப் படுகிறது. " 100.இப்போது இங்கே முதலில் தொடங்கும் படியாக ஒரு சீமாட்டி இருக்கிறாள். இப்போது, நான் ஜெப வரிசையை ஆரம்பிப்பதற்கு முன்னர், நான் இதை மட்டும் கூறிக்கொள் கிறேன்: இப்போது, இந்த ஜெப வரிசை முழுவதும் இருப்பவர்களே, உங்களுடைய ஜீவியத்தில் நீங்கள் பாவத்தோடு இருந்தால்... நான் ஒவ்வொரு நபரையும் மிக கவனமாக ஆராய்ந்ததற்கான காரணம் என்னவென்றால், நீங்கள் வரத்தை பயன்படுத்தி, உங்களை நீங்களே பிரச்சனைக்குள் சிக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது எவருக்குமே தெரியும், நாம் அனைவரும் அதை அறிவோம். தேவன் எதை செய்யவேண்டாம் என்று மோசேயிடம் கூறினாரோ, சரியாக அதையே அவன் செய்தான், ஆனால் அவன் அதை செய்தான், எப்படியோ, அவன், “அங்கே சென்று, கன்மலையை பார்த்து பேசு” என்று தேவன் அவனிடம் கூறியி ருந்தார், அவன் கன்மலையை அடித்துவிட்டான், ஆனால் அவன் தேவனிடம் பிரச்சனையில் மாட்டிக்கொண்டான். 101. அந்த பிள்ளைகள் அந்த வழுக்கைத்தலை கொண்ட இளம் தீர்க்கதரிசியாகிய எலிசாவை பரியாசம் பண்ணி, “வயதான சொட்டை தலையா, வயதான சொட்டை தலையா, நீ ஏன் மேலே போகவில்லை?” என்று கூறிக் கொண்டிருந்தபோது, அவன் திரும்பி அந்த சிறு பிள்ளைகளை கர்த்தருடைய நாமத்தால் சபித்தான், உடனே இரண்டு பெண் கரடிகள் நாற்பத்தி இரண்டு சிறு அப்பாவி பிள்ளைகளை கொன்று போட்டது, அது பரிசுத்த ஆவியான வரின் சுபாவம் என்பதை ஒருபோதும் என்னால் நம்பவே முடியாது. அது உண்மைதானே? அது பரிசுத்த ஆவியானவரின் சுபாவம் போன்று தோன்றவில்லை, ஆனால் அது ஒரு கோபமடைந்த தீர்க்கதரிசியினுடையதாயிருந்தது; நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 102. ஆகையால் உங்களை ஒழுக்கத்திற்குள் கொண்டு வருவதற்காக, உங்கள் மீது வியாதியை போடும்படி தேவன் பிசாசை அனுமதித்திருந்தால் என்ன செய்வது? அப்போது ஏதோவொரு வரம் வந்து, உங்கள் மீது கொஞ்சம் எண்ணெயை ஊற்றி, அந்த காரியத்தை உங்களை விட்டு துரத்தி விட்டால்? அப்போது அந்த நபர் தேவனிடம் பிரச்ச னையில் மாட்டிக்கொள்கிறார். பாருங்கள்? 103. எனவே நினைவில்கொள்ளுங்கள், அந்த வரிசையில் இருக்கும் உங்களிடம் அறிக்கை செய்யப்படாத பாவம் இருந்தால், வரிசையை விட்டு வெளியே வந்துவிடுங்கள், ஏனெனில் வரும்போது இருந்ததைவிட அது உங்களை இன்னும் அதிக மோசமாக்கிவிடும். பாருங்கள்? இப்போது, இன்றிரவு நான் அதை மீண்டுமாக உங்கள் மடியிலே போடுகிறேன். பாருங்கள்? அது [பாவ அறிக்கை] இல்லாமல் நீங்கள் மேடைக்கு வந்தால், அது உங்கள் மீதுதான் இருக்கிறது, ஏனெனில் நான் தரிசனங்களை தேடப்போவது கிடையாது, நான் எப்படி ஜெபிக்க வேண்டுமென்று நீங்கள் எல்லாரும் விரும்பினீர்களோ அப்படிதான் நான் ஜெபிக்கப்போகிறேன். அதைத்தானே சபை விரும்பியது? ஜெபித்து வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பது, அது... இந்த வாரத்தின் பிற்பகுதியில், இன்னொரு விதமான வரிசைக்கு நீங்கள் மீண்டும் திரும்ப விரும்பினால், அதையும் செய்யலாம். அது எல்லா நேரங்களிலும் இங்கேதான் இருக்கிறது. 104. வீதிகளிலும் இருக்கிறது, எத்தனை பேருக்கு அது தெரியும், பொது ஜீவியத்தில் எல்லா விடங்களிலும், ஜனங்களை வீதியிலும் மற்ற இடங்களிலும் சந்திக்கும்போது, தரிசனங்கள் வருவதை கண்டிருக்கிறேன், நான் அவை களைப் பற்றி கூறுவதை நீங்கள் கேட்டிருக் கிறீர்களா? கட்டிடம் முழுவதும் இருப்ப வர்களில், அதை அறிவோம் என்பவர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள். நிச்சயமாக. பாருங்கள்? அது சபையில் மட்டும் கிடையாது, அது வீட்டிலிருக்கிறது, வீதியிலிருக்கிறது, எல்லாவிடங்களிலும் இருக்கிறது. 105. வீதிக்கு செல்லும்போது, கர்த்தர், “அங்கே போகாமல், இந்த இன்னொரு மூலையில் போ. நீல நிற சூட் அணிந்த ஒரு மனிதன் அங்கே நின்று அழுதுகொண்டிருக்கிறார், அவருடைய வீட்டிற்கு போ, அவருடைய மனைவி மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறாள். போய் உன் கைகளை அவள் மீது வை” என்று கூறுவார். "106. ""நீல நிற சூட் அணிந்த ஒரு மனிதன் இங்கே இருக்கப் போகிறார், அவருடைய மனைவி கட்டிலில் படுத்திருக்கிறாள். அந்த வீட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, அங்கே குறிப்பிட்ட ஒரு படம் மாட்டி வைக்கப் பட்டிருக்கிறது” என்று காரில் இருக்கும் நபர்களிடம் நான் கூறுவேன். அது ஒவ்வொரு முறையும் முற்றிலும் சரியாக இருக்கும். பாருங்கள்? அது எல்லாவிடங்களிலும் நடக்கும். " 107. இப்போது, எனவே அதனால் பரிசுத்த ஆவியானவர் தான் இங்கே இருக்கிறார் என்பதை நீங்கள் கண்டுக் கொள்ளலாம்: இந்த பெண் எனக்கு அந்நியராயிருக்கிறாள். சீமாட் டியே, அது உண்மைதானே? நாம் ஒருவரை ஒருவர் அறியோம், ஆனால் நம் இருவரையும் தேவன் அறிவார். இப்போது, ஒரு நிமிடத்திற்கு நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் எதற்காக இங்கே நின்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினால், அது தேவன்தான் என்பதை நீங்கள் விசுவாசிப் பீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்கள். 108. ஜனங்களில் எத்தனைப்பேர் அதை விசுவாசிப்பீர்கள்? எனவே மீதமுள்ளவர்கள், தரிசனம் வேண்டுமென்று, நீங்கள் கேட்ககூட அவசியமிருக்காது, எப்படியாயினும், நீங்கள் அதை விசுவாசிப்பீர்கள் தானே? இப்போது விசுவாசத்தை மாத்திரம் கொண்டிருங்கள். 109. இப்போது, இந்த சீமாட்டி, நான்... இவள்... அநேகமாக நாங்கள் பல வருடங்கள் வித்தியாசத்தில், பல மைல்கள் தூரத்தில் பிறந்திருக்கலாம், நான் - நான் இவளை இதற்கு முன் ஒருபோதும் கண்டதே இல்லை, இது தான் நாம் முதல் முறையாக சந்திப்பது என்று நான் நினைக்கிறேன், அதைத் தவிர வேறொன்றும் இல்லை, நாம் இங்கே நின்றிருக்கி றோம். ஆனால் கர்த்தராகிய இயேசு உங்களிடம் ஏதோ வொன்றை கூறுவாரென்றால், அவர் என்ன கூறப்போகிறார் என்பது எனக்கு தெரியாது, ஆனால் உங்களுக்கு தெரிந்த ஏதோவொன் றாயிருக்கும், அது எனக்கு தெரியாத தாயிருக்கும், நீங்கள் செய்த ஏதோவொன்றை அல்லது நீங்கள் செய்யும்படி திட்டமிடுகிற ஏதோவொன்றை அல்லது எதோ வியாதியை, அல்லது உங்களுக்கு இருக்கும் ஏதோவொரு பிரச்சனையை, அதை அவர் வெளிப்படுத் தினால், அது ஏதோவொரு வல்லமையின் மூலமாகதான் வர வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள். 110. இயேசுவின் நாட்களில் இருந்த நவீன சபையைப் போல, அது பெயெல்செபூல் என்று கூறுவீர்களா, அல்லது கிணற்றண்டையில் இருந்த அந்த பெண்ணை போல, “உம்மை தீர்க்கதரிசியாக காண்கிறேன். மேசியா வரும் போது, இந்த காரியங்களை எங்களுக்கு அறிவிப்பார்” என்று கூறுவீர்களா. அது கர்த்தராகதான் இருக்கவேண்டும் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? ஏனெனில் அது அவருடைய வாக்குத்தத்தமாயிருக்கிறது. 111. இந்த பெண் ஒரு கிறிஸ்தவளைப் போல தெரிகிறாள், ஏனெனில் இவளுடைய ஆவி வரவேற்கப்பட்டதை உணருகிறது. ஜனக் கூட்டத்தால் என் சத்தத்தை இன்னுமாக கேட்க முடிந்தால், எனக்கும் இந்த பெண்ணுக்கும் இடையே அந்த வெளிச்சம் வருகிறது, ஒரு தரிசனம் வரப்போகிறது. இந்த பெண்ணிற்கு ஒரு அறுவை சிகிச்சை நிலுவையில் உள்ளது. அது உண்மை. அது என்னவிதமான அறுவை சிகிச்சை என்பதை தேவனால் எனக்கு சொல்ல முடியும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது பித்தப்பை கல்லிற்கான அறுவை சிகிச்சை. அது உண்மை. அது சரி. நீங்கள் மகிழ்ச்சியாயிருந்தீர்கள், நீங்கள் இங்கே மேலே நடந்து வந்தபோது ஏதோவொன்றை குறித்து மகிழ்ச்சியாயிருந்தீர்கள். ஏனெனில் இன்றிரவு இந்த ஜெப வரிசைக்கு அழைக்கப்பட்டதால் நீங்கள் மகிழ்ச்சியாயிருந்தீர்கள். அது சரி. இந்த இரவு உங்களுடைய இரவாக இருக்க வேண்டுமென்று, நீங்கள் அழைக்கப்பட வேண்டுமென்று, வருவதற்கு முன்பாக நீங்கள் இந்த மத்திய வேளையில் ஜெபித்தீர்கள். அது சரிதானே? 112. இப்போது, உங்களுடன் நான் அந்த அறையில் இல்லை என்பது உங்களுக்கு தெரியும். நான் உங்களுக்கு அந்த காரணத்தை கூறுகிறேன்: உங்களால் இங்கே இருக்க முடிந்த கடைசி இரவு இதுதான். உங்களால் திரும்பி வந்திருக்க முடியாது. அது சரி. ஏன் என்று நான் ஜனக்கூட்டத்திடம் கூறினால் அது உங்களை சங்கட படவைக்குமா? பேருந்து கட்டணத்தின் நிமித்தமாக. அது சரி. நீங்கள் திரும்பி வரவேண்டிய அவசியமில்லை, இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். இப்போது வீட்டிற்கு செல்லுங்கள். தேவனாகிய கர்த்தர் தாமே இந்த விண்ணப்பத்தை நம் சகோதரிக்கு அருளுவாராக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. 113. தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? இப்போது பயபக்தியாய் இருங்கள், நாம் ஜெபிக்கலாம். 114. உங்களுடைய பிரச்சனை என்னவென்பதை நான் அறிந்துகொள்ள விரும்பவில்லை, நீங்கள் அப்படியே வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன், எனவே என்னால் உங்களுக்காக ஜெபிக்க முடியும். 115. அன்பான கர்த்தாவே, எது கோளாறாக இருந்தாலும், எங்களுடைய சகோதரியை குணமாக்கி, இவளை ஆரோக்கியமாக்கும், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில், இவள் மீது நான் கைகளை வைக்கிறேன், இயேசுவின் நாமத்தில் ஆமென். 116. இப்போது, கர்த்தருக்கு நன்றிகளை கூறிக்கொண்டே, சந்தோஷமாக செல்லுங்கள். என் சகோதரனே, கர்த்தர் உங்களை சுகப்படுத்துவார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 117, அது அதிசயமாக இல்லையா? தரிசனத்தை பற்றின எந்த எண்ணமுமே இல்லை. பாருங்கள், அது எல்லாமே இப்போது கடந்துவிட்டது, அது சென்றுவிட்டது. இதற்கு முன்பு என்னால் அப்படி செய்ய முடியாது என்று எத்தனை பேருக்கு தெரியும்? என் கூட்டங்களில் இருந்தவர்களே, உங்கள் கைகளை உயர்த்துங்கள். நிச்சயமாக முடியாது. தரிசனத்துக்கான எந்த அறிகுறியுமே இல்லை. பாருங்கள்? இவர் தேவனுடைய பிரசன்னத்தில், இவருடைய சகோதரனின் பிரசன்னத்தில் அல்ல, ஆனால் தேவனுடைய பிரசன்னத்தில் நிற்கிறார் என்பதை அறிந்தவனாய், நான் என் கைகளை இவர் மீது வைக்கும்போது, தேவன் இந்த, என் சகோதரனை, சுகமாக்குவார் என்று நான் ஜெபிக் கிறேன். இவருடைய சுகமளித்தலை நான் இயேசுவின் நாமத்தால் கேட்கிறேன். ஆமென். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அன்பான தேவனே, என் சகோதரன் மீது நான் கைகளை வைத்து, இவருடைய சரீரத்தை நீர் சுகமாக்க வேண்டுமென்றும், இவரை ஆரோக் கியமாக்க வேண்டுமென்றும் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தால். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது களிகூர்ந்தபடியே செல்லுங்கள். 118. நீங்கள் எல்லாரும் இங்கேயிருந்து சென்ற பிறகு, நீங்கள் - நீங்கள் சுகமானால், நீங்கள் சுகமானதைப் போல நடந்துக்கொள்ளுங்கள், நீங்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் விசுவாசிக்கிறவர்களாக நடந்துக்கொள்ளுங்கள். “கர்த்தாவே, உமக்கு நன்றி, அது முடிக்கப்பட்ட கிரியை, அது முடிக்கப்பட்டு விட்டது” என்று கூறிக்கொண்டே செல்லுங்கள். 119. நல்லது, “அது வெறும் அந்த ஒருவருக்கு மட்டும்தான் அந்த ஒரு நபருக்கு மட்டும்தான் செய்யப்பட்டது அவ்வளவுதான், அது...” என்று நீங்கள் கூறலாம். 120. அது அப்படியல்ல! எல்லாம் சரி. இங்கே, இதுதான் இதுதான் அந்த சீமாட்டியா? எல்லாம் சரி, சீமாட்டியே, நீங்களும் நானும் அந்நியர் களாயிருக்கிறோம், ஆம்தானே? எல்லாம் சரி. நீங்கள் என்னை இதற்கு முன் பார்த்திருக்கிறீர் கள், ஆனால் எனக்கு உங்களை தெரியாது, நீங்கள் யார், நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று ஒன்றுமே தெரியாது, அது சரி. அது உண்மைதானே? உங்களுடைய பிரச்சனை என்னவென்பதை இயேசு கிறிஸ்துவால் என்னிடம் கூற முடியும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் கூற விரும்பும் முதல் காரியம், இதற்கு முன்பாக நீங்கள் சுகமடைந்து இருக்கிறீர்கள். அது சரி. நீங்கள் ஒரு பெண் ஊழியக்காரர். உம்-உம்ம். இப்போது நீங்கள் பெலவீனத்தாலும், பதட்டத்தாலும், பெண்க ளுக்கான பிரச்சனையாலும் சிக்கல்களாலும் வேதனைப்படுகிறீர்கள். அது சரியென்றால், உங்கள் கையை உயர்த்துங்கள். சென்ற முறை நீங்கள் சுகமடைந்ததை போலவே, இந்த முறையும் நீங்கள் சுகமாகி விட்டீர்கள். மேடையை விட்டு நகர்ந்து சென்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் சுகமாகுங்கள். வாருங்கள் சகோதரியே. தேவனாகிய கர்த்தாவே, எங்கள் பரலோக பிதாவே, தகுதியே இல்லாத என் கைகளை இவள் மீது வைக்கும் போது, நீர் இந்த அன்பான ஆத்துமாவை ஆசீர்வதித்து இவளை சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், உம்முடைய பரிசுத்த குமாரன், இயேசுவின் நாமத்தால். ஆமென். அந்த அப்பா சிறு ரிக்கிக்காக விசுவாசித் ததைப்போல, விசுவாசித்தபடியே செல்லுங்கள். சுகமாகிவிடுவீர்கள். 121. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்னை அவருடைய ஊ ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்ச னையை தேவனால் எனக்கு வெளிப்படுத்த முடியும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பதட்ட நிலைமை. அவர் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும்? எல்லாம் சரி, ஐயா, அப்படியானால் நீங்கள் ஒரிகானுக்கு திரும்பி சென்று, உங்கள் வீட்டில் ஆரோக்கியமாக இருங்கள். அது சரி. களிகூர்ந்த படியே உங்கள் பாதையில் செல்லுங்கள். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பரலோக பிதாவே, இயேசுவின் நாமத்தால் இந்த அன்பான பெண்ணை நீர் ஆசீர்வதித்து இவளை சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். அன்பான தேவனே, இந்த வாலிப பெண்ணை நீர் சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தால். ஆமென். தேவன் நம் சகோதரனை ஆசீர்வதிப்பாராக, என் கைகளை நான் இவர் மீது வைக்கும்போது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தால் நான் இவருடைய சுகமளித்தலை கேட்கிறேன். ஆமென். 122. அங்கே இருப்பவர்களே நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது அனைவரும் தேவனிடம் தயவு பெற்றுள்ளீர்கள், தயவு பெற்றவர்களாய், விசுவாசித்துக் கொண்டே இருங்கள், சந்தேகப்படாதீர்கள், ஆனால் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இப்போது, நீங்கள் உட்கார்ந்திருக்கிற இடத்திலேயே உட்கார்ந்திருங்கள், பயபக்தி யாயிருங்கள். அங்கே இருப்பவர்களில் எத்தனை பேரிடம் ஜெப அட்டை இல்லாமல் இருந்து, ஆனால் தேவன் உங்களை சுகப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? உங்கள் கையை உயர்த்துங்கள். அவ்வளவுதான். தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருங்கள். 123.சீமாட்டியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்சனை என்னவென்பதை தேவனால் என்னிடம் கூற முடியும் என்பதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்சனை என்னவென்பதை நான் உங்களிடம் கூறினால், அது உங்களை நன்றாக உணரவைக்குமா? இந்த பெண்ணோடு சிறிது நேரம், எனவே தேவனுடைய ஆவியானவர் தான் இங்கே இருந்து, இந்த காரியங்களை செய்கிறார் என்று ஜனங்களாகிய நீங்கள் - நீங்கள் திருப்தி அடைந்து விடுவீர்கள். 124. இந்த பெண்ணிற்கு அவளுடைய பெருங்குடலில் பிரச்சனையிருக்கிறது. அது சரி. உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆம்தானே? நீங்கள் யார் என்பதை தேவன் எனக்கு கூறினால், நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? எல்லாம் சரி, மிஸ். ஸ்னைடர், நீங்கள் வீட்டிற்கு சென்று சுகமாகுங்கள், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில். ஆமென். நீங்கள் அதை விசுவாசித்தால். 125. இப்போது, இப்போது தேவனில் விசுவாசமாயிருங்கள். அதற்காக மனதை வற்புறுத்த வேண்டாம், பாருங்கள், தேவன் இங்கேயிருக்கிறார் என்பதை மாத்திரம் விசுவாசியுங்கள். கர்த்தாவே, இந்த பெண்ணை நீர் குணமாக்கி இவளை ஆரோக்கியமாக்க வேண்டுமென்று, இயேசுவின் நாமத் தால் நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அதை அருளும். சகோதரனே வாருங்கள். ஓ கர்த்தாவே, நீர் இவரை குணமாக்கி ஆரோக்கிய மாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தால். ஆமென். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? இயேசு கிறிஸ்துவின் நாமத்தால், நான் இந்த என் சகோதரியின் மீது, இவளுடைய சுகமளித்தலுக்காக என் கைகளை வைக்கிறேன். ஆமென். [“சகோதரனே, இதோ ஒரு டம்ளரில் தண்ணீர் இருக்கிறது. உங்களுக்கு பின்னாடி ஒரு டம்ளரில் தண்ணீர் இருக்கிறது” என்று ஒரு சகோதரன் கூறுகிறார்”] (அது பரவாயில்லை, சகோதரனே.) அன்பான தேவனே, இவருடைய இருதயத்தின் வாஞ்சையை இவருக்கு தந்து, இவரை சுகமாக்க வேண்டுமென்று, எங்களுடைய சகோதரனுக்காக நான் ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தால். ஆமென். சகோதரியே, நீங்கள் வருவீர்களா? கர்த்தாவே, எங்களுடைய சகோதரியை நீர் குணமாக்கி இவளை ஆரோக்கியப்படுத்த வேண்டுமென்று நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் ஜெபிக்கிறேன். ஆமென். சகோதரியே, முன்னே வாருங்கள். இப்போது விசுவாசமாயிருங்கள், ஜெபத்தி லிருங்கள். அனைவரும் கர்த்தாவே, எங்களுடைய சகோதரிக்காக, நீர் இவளை சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென். இப்போது விசுவாசத்தோடு வாருங்கள். கர்த்தாவே, எங்களுடைய சகோதரியை நீர் குணமாக்கி இவளை ஆரோக்கியப்படுத்த வேண்டுமென்று நான் இயேசுவின் நாமத்தால் ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் இவளை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தாவே, நான் இவள் மீது என் கைகளை வைத்து, இவளுடைய சுகமளித்தலை கேட்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தால். ஆமென். தேவன் நம்முடைய சகோதரனை ஆசீர்வதித்து இவரை சுகமாக்குவாராக. இயேசுவின் நாமத்தால். ஆமென். 126. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள், நண்பர்களே, உங்களுக்கு புரிகிறதா? இப்போது, ஏன் என் ஊழியம் என்பது உங்களுக்கு புரிகிறதா, சகோதரன் டேவிட்? உங்களுக்கு புரிகிறதா? பாருங்கள், நீங்கள்... இந்த ஜனங்கள் அதை புரிந்துகொண்டார்களானால், தரிசனத்தை பார்த்து, கைகளை வைக்கும்போது எவ்வளவு சந்தோஷப்படுவார்களோ அவ்வளவாக அவர்கள் சந்தோஷப்படுவார்கள். தரிசனத்திற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. அந்த மற்ற ஜனங்கள்... ஏன், அது... அவர்கள் அதை புரிந்துக்கொள்ள போவதில்லை என்று நான் நினைத்தால், நான் - நான் அவர்களை நிறுத்தியிருந்திருப்பேன். பாருங்கள்? நீங்கள் மாற்றிகொண்டிருப்பது என்பது கடினமாக இருக்கிறது, பாருங்கள். நல்லது, நான் கர்த்தரை கண்டேன் என்று நான் விசுவாசித்தால், நான் வியாதியாயிருந்து மேடையில் நடந்துவந்தால், சில... அந்த விதமாக நான் கர்த்தருடைய பிரசன்னத்தை நான் கண்டு, வேதவாக்கியத்தின்படி யாரேனும் எனக்கு ஜெபித்தால், நான், “கர்த்தாவே, உமக்கு நன்றி! ஆமென். அது முடிந்துவிட்டது” என்று கூறியிருப்பேன். அதுதான் எல்லாம். முடிந்த அளவுக்கு நான் இங்கிருந்து களிகூர்ந்து கொண்டும் சந்தோஷமாகவும் வெளியே சென்றிருப்பேன். ஓ, எவ்வளவு மகிமை! 127. ஆங்கிலம் பேசுவீர்களா? என்னை அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்சனை என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், என்னை அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? 128. அந்த கறுப்பின சீமாட்டி, உயர் இரத்த அழுத்தத்தோடு அங்கே பின்னாடி உட்கார்ந்து, என்னை பார்த்துக்கொண்டு இருக்கிறாள், சகோதரியே, கர்த்தராகிய இயேசு உங்களை சுகமாக்குகிறார் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? உங்களிடம்-உங்களிடம் ஜெப அட்டையில்லை, ஆம்தானே? உங்களிடம் உங்களிடம் ஜெப அட்டையிருக்கிறதா? இல்லை. உங்களுக்கு அது தேவையில்லை. உங்களுடைய விசுவாசம் உங்களை குணமாக்கியது. 129. அது என்னவென்று உங்களுக்கு புரிந்ததா? பாருங்கள், அந்த சீமாட்டி, இன்னொரு சீமாட்டி இங்கே நிற்பதை நான் கண்டேன், இந்த பெண்ணோ அநேகமாக, ஸ்பானிய நாட்டை சேர்ந்தவள், ஆனால் ஒரு கருப்பின சீமாட்டி தொடர்ந்து இங்கே காட்சியளித்துக்கொண்டே இருந்தாள், அவள் பெரிய, பருமனான, உயரமான பெண்ணாக இருந்தாள், அதை அவள் கையில் வைத்திருந்தவாறு நான் தொடர்ந்து அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன், எனவே, அது எங்கேயிருக்கிறது என்பதை கண்டறிய நான் சுற்றும்முற்றும் பார்த்தேன், “அது எங்கேயிருக்கிறது?” என்று நான் நினைத்தேன். அந்த ஒளியின் தூதனானவர் (Angel of Light) சரியாக அந்த பெண்ணின் மீது நிற்பதை நான் கண்டு, அதை நான் அழைத்தேன். அதனால்தான் அது நடந்தது. 130. அவள் எதை தொட்டாள்? அவள் எதை தொட்டாள்? நான் அந்த பெண்ணை என் ஜீவியத்தில் கண்டதே இல்லை. வரிசையில் அழைக்கப்படும்படியாக அவளிடம் ஜெப அட்டைக்கூட இல்லாமல் அங்கே உட்கார்ந் திருந்தாள், ஆனால் அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள். அது சரியென்றால், சீமாட்டியே, உங்கள் கையை அசையுங்கள், இப்போது சுகமான பெண்ணே. அது சரியென்றால் அங்கே பின்னாடி இருந்து உங்கள் கையை அசையுங்கள், அங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அது சரி. பாருங் கள்? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, விசுவாசமாயிருங்கள். 131. இங்கே, அது ஒரு சங்கிலிதொடரை ஆரம்பித்து விட்டது, இங்கே இன்னொரு கருப்பின பெண் சரியாக எனக்கு முன்பாக அந்த வரிசையின் கடைசியில் உட்கார்ந்து இருக்கிறாள், சரியாக இங்கே, அவளும் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். ஆம், அம்மையாரே. அந்த அந்த வயிற்று பிரச்சனை சரியாகிவிட்டது என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா, இருதய பிரச்சனை சரியாகி விட்ட தென்று? உங்களுக்கு இருதய பிரச்சனையும் வயிற்று பிரச்சனையும் இருக்கிறது. அது சரியென்றால், உங்கள் கையை அசையுங்கள். நீங்களும் ஜெபித்துக்கொண்டு இருந்தீர்கள், நீங்கள் சுகமாகிவிட்டீர்கள். உங்களிடம் ஜெப அட்டையிருக்கிறதா? உங்களிடம் ஜெப அட்டை இல்லையா. இல்லை, ஐயா, உங்களுக்கு தேவையில்லை, உங்களுடைய விசுவாசம் உங்களை ஆரோக்கியமாக்குகிறது. 132. இப்போது, அந்த சீமாட்டியை கேட்டுப் பாருங்கள். சற்று முன்னர் சுகமான அந்த சீமாட்டி, உங்களிடம் ஜெப அட்டையில்லை, இருக்கிறதா, சீமாட்டியே? உங்களிடம் ஜெப அட்டையில்லை. இல்லை. நீங்கள் அங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். “கர்த்தாவே, அது நானாக இருக்கட்டும் என்று.” 133. அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள், அவள் அங்கே சுகமாகிவிட்டாள். அவள் எதை தொட்டாள்? பிரதான ஆசாரியரை. விசுவாசிக்க போகிற ஜனங்களுக்காக, கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. 134. இப்போது, இந்த சிறு சீமாட்டியை இங்கே வர விடலாம், அதன்பின் மீதி இருக்கும் ஜனங்கள் வரட்டும், ‘ஏனெனில் அந்த தாக்கம் இப்போது மிகமிக அதிகமாகி விட்டதை உங்களால் உணரமுடிகிறது, உங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறதா, அது அப்படியே நகர ஆரம்பிக்கிறது. 135. அங்கே உட்கார்ந்திருக்கும் அந்த சிறு சீமாட்டி, அங்கே முன்னாடி இருந்து தன் முகத்தின் மீது தன் கைகளை வைத்தபடி என்னை பார்த்துக்கொண்டிருக்கிறாள், அவள் மூச்சுக்குழாய் அழற்சியால் (Bronchitis) அவதிப்படுகிறாள், அவள் விசுவாசிக்க மட்டும் செய்தால்! சீமாட்டியே, உங்களிடம் - உங்களிடம் ஜெப அட்டையிருக்கிறதா? நீங்கள் ஜெப வரிசையில் இல்லை. நீங்கள் ஜெப வரிசையில் இல்லையென்றால், எழுந்து நில்லுங்கள். உங்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சி இருந்தது, ஆம்தானே? எல்லாம் சரி. வீட்டிற்கு சென்று இப்போது விசுவாசியுங்கள், இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். அது சரி. 136. அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொடுங்கள். அந்த பெண் என்னை தொடவில்லை, இந்த ஜனங்கள் யாருமே என்னை தொடவில்லை. அவர்கள் எதை தொட்டார்கள்? அவர்கள் பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவை தொட்டார்கள், அப்போது அவர் கிரியை செய்தது போலவே இப்போதும் கிரியை செய்கிறார், ஆனால் அவருடைய சபையின் வழியாக. அவர்கள் இந்த பக்கமாக பார்க்கிறார்கள், அப்போது என் குரலை பயன்படுத்தி அவர் பேசுகிறார். ஜனங்களிடம் நான் என்ன கூறினேன் என்று என்னால் உங்களிடம் கூற முடியாது, எனக்கு தெரியாது, ஒலிநாடாக்கள் மூலமாகவும் மற்றவற்றின் மூலமாகவுமேயன்றி, அதை அறிந்துக்கொள்ள எனக்கு வேறு எந்த வழியுமே இல்லை. ஆனால் அது, தேவனுடைய குமாரனாகிய இயேசு, தன்னுடைய வருகை சமீபத்திலிருக்கிறது என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார், அது இப்போது அருகில் வந்து கொண்டிருக்கிறது. ஜனங்கள் தேவனோடு சரியாக வேண்டும், பிரிவினையின் சுவர்களை தகர்த்து, சரியாகி, தேவனை விசுவாசிக்க வேண்டும். நம்முடைய நேரம் மிக துரிதமாக நகர்ந்துக்கொண்டிருக்கிறது. 137. இப்போது, இங்கேயிருக்கிறதான இந்த சிறு சீமாட்டி, இங்கே இருப்பவள், இவளை இங்கே அனைவரின் கவனத்துக்காகவும் நான் நிற்கவைத்ததால், நான் அவளோடு பேசப் போகிறேன், என்னவாயினும், நான் உங்களிடம் ஒன்றையும் கூறவில்லையென்றாலும், என்ன வாயினும் நீங்கள் விசுவாசிப்பீர்கள், ஆம்தானே? எல்லாம் சரி. ஆனால் இந்த இன்னொரு சீமாட்டி, அவள் ஒரு கருப்பினத்தை சேர்ந்த, எத்தியோப்பிய பெண், ஸ்பானிஷ் நாட்டு பெண்ணாகிய உங்களுக்கு முன்பாக காட்சியளித்தாள், அவளின் விசுவாசம் அதை அந்த வழியில் இழுத்து விட்டது, நான் உங்க ளிடம் ஒரு நிமிடம் பேசுகிறேன், எனவே அது ஸ்பானிஷ் ஜனங்களுக்கு உதவும். முன்னதாக ஆங்கிலோ-சாக்ஸான் இருந்தார், இப்போது, இப்போது நீங்கள் ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்தவராக இருக்கிறீர்கள். அநேகமாக அது இன்றிரவு இங்கேயிருக்கிறதான முழு சபையையும் விசுவாசிக்க செய்திருக்கலாம். 138. எனக்கு உங்களை தெரியாது, உங்களை என் ஜீவியத்தில் நான் கண்டதே இல்லை, நாம் அந்நியர்கள். அது சரிதானே? அது உண்மையென்றால், உங்கள் கையை உயர்த்துங்கள். இப்போது, ஸ்பானிஷ் ஜனங்களே, இது உங்களுக்காக; எத்தியோப்பிய ஜனங்களே, இது உங்களுக் காக; அந்த மற்றைவைகள் இங்கேயிருக்கிறதான, வெள் ளையர்களான ஆங்கிலோ-சாக்ஸன்களே உங்களுக்காக. தேவன் இனத்தையோ அல்லது ஜனங்களையோ வைத்து பாகுபாடு பார்ப்பவர் அல்ல. இல்லை, ஐயா. நாம் அனைவரும் ஒரே இரத்தத்தால் பிறந்தோம். நாம் வெள்ளை நிறமாக, கருப்பு நிறமாக, மஞ்சள் நிறமாக, பழுப்பு நிறமாக இருந்தாலும், நாம் ஒருவருக்கொருவர் இரத்த மாற்றம் செய்து கொள்ள முடியும், 'ஏனெனில் நாம் ஒரே இரத்தத்தில் இருந்து வந்தோம். அது சரி. நாம் வசிக்கிறதான நாடுகள், நம் நிறத்தை மாற்றிவிட்டது அதற்கும் நம் இரத்தத்திற்கும், ஜீவியத்திற்கும், நம்முடைய சிருஷ்டிகருக்கும் சம்பந்தமே இல்லை, ஆனால் தேவன் ஜனங்களையோ, ஜாதியையோ, எந்த தேசத்தை சேர்ந்தவர் என்பதையோ அல்லது நிறத்தையோ வைத்து பாகுபாடு பார்ப்பவரல்ல. 139. உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நிலுவையிலுள்ளது, அது ஒரு அறுவை சிகிச்சைக்கும் அதிகமானதாக இருக்கப் போகிறது, நீங்கள் கர்பமாக இருக்கிறீர்கள். இப்போது, நான் அதை கூறியதற்கான காரணம் என்னவென்றால், அது ஒரு கட்டியென்று யாரேனும் நினைத்து விடுவார்கள், ஆனால் அது அதல்ல. ஆனால் உங்களுக்கு இன்னொரு அறுவை சிகிச்சையும் செய்யப்படவேண்டும். அது குடலிறக்கத்துக்காக (rupture). அது சரிதானே, இல்லையா? மேலும் உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது, அதற்காக சிசேரியன் (cesarean) செய்ய வேண்டும். அது உண்மைதானே? உங்கள் கையை உயர்த்துங்கள். செல்லுங்கள், தேவன் உங்களை ஆசீர்வதிக்கப் போகிறார், அது எல்லாம் சரியாகிவிடும். தேவன் நம் சகோதரியை ஆசீர்வதிப்பாராக. 140. உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் இந்த மற்ற ஜனங்களுக்காக ஜெபிக்கையில் இப்போது ஜெபத்திலிருங்கள். அன்பான பிதாவே, இந்த பெண்ணை நீர் சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், மேலும் இவள் இந்த சபைக்கு களிகூர்ந்தபடியே திரும்பி வரட்டும்... [ஒலி நாடாவில் காலியிடம்]... இயேசுவின் நாமத்தால். ஆமென். தேவனே, நான் இந்த பெண்ணிற்காகவும், இந்த சிறுவனுக்காகவும் ஜெபிக்கிறேன், நான் இவர்கள் மீது என் கைகளை வைத்து, இவர்களை சுகமாக்க வேண்டுமென்று உம்மிடம் வேண்டுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தால். ஆமென். தேவன் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக. தேவனே, நீர் இவளை சுகப்படுத்தி, இந்த மயக்கங் களை இவளை விட்டு எடுத்துப்போட வேண்டுமென்று, இந்த சிறு சீமாட்டிக்காக நான் ஜெபிக்கிறேன், இவளுக்கு அவைகள் மீண்டும் வராதிருப்பதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தால். ஆமென். தேவனே, எங்கள் சகோதரனை ஆசீர்வதியும், நீர் இவரை சுகப்படுத்தி, இவரை ஆரோக்கியப் படுத்த வேண்டுமென்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் நான் ஜெபிக்கிறேன். சகோதரனே, அதுதான் விஷயம். கர்த்தாவே, இவரை நீர் ஆரோக்கியமாக்க வேண்டுமென்று, எங்கள் சகோதரனுக்காக நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தால். ஆமென். ஐயா, வாருங்கள். என் அன்பான சகோதரனே, நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன், தேவனுடைய வார்த்தையின்படி உங்கள் மீது கைகளை வைக்கிறேன். உங்களுடைய சுகமளித்தலுக்காக, நான் இயேசுவின் நாமத்தால் கேட்கிறேன். ஆமென். என் சகோதரனே, நான் உங்களுக்காக ஜெபித்து, இப்போது அருகில் இருக்கிறதான பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தின் மூலமாக, உங்கள் மீது கைகளை வைத்து, உங்களுடைய சுகமளித்தலுக்காக, நான் இயேசுவின் நாமத்தால் கேட்கிறேன். நான் என் கைகளை இந்த என் சகோதரன் மீது வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் இவர் சுகமாக வேண்டுமென்று நான் கேட்கிறேன். ஆமென். என் சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, நான் என் கைகளை உங்கள் மீது வைத்து, நீங்கள் சுகமாக வேண்டுமென்று, இயேசுவின் நாமத்தால் கேட்கிறேன். ஆமென். என் அன்பான சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, நீங்கள் சுகமாக வேண்டுமென்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் கேட்டுக் கொள்கிறேன். ஆமென். என் சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, நீங்கள் சுகமாக்கப்பட வேண்டுமென்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் அதை கேட்கிறேன். ஆமென். என் சகோதரனே, நான் உங்களுக்காக ஜெபித்து, நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டு மென்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் அதை கேட்கிறேன். என்சகோதரனே, நான் உங்களுக்காக ஜெபித்து, தேவன் உங்களை சுகமாக்க வேண்டுமென்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் அதை கேட்கிறேன். என் சகோதரனே, நான் உங்களுக்காக ஜெபித்து, நீங்கள் ஆரோக்கியமாக வேண்டுமென்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் அதை கேட்கிறேன். என் சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, இயேசுவிடம் உங்களை சுகப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஆமென். என் சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, அவர் உங்களை சுகப்படுத்த வேண்டுமென்பதை நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் கேட்கிறேன். ஆமென். அதுதான் வழி. என் சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, நீங்கள் சுகமாக்கப்பட வேண்டுமென்று நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் கேட்கிறேன். ஆமென். என் சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, நீங்கள் சுகமாக்கப்பட வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் கேட்கிறேன். என் சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, நீங்கள் சுகமாக இருக்க வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் கேட்கிறேன். இப்போது இப்போதே விசுவாசியுங்கள். என் சகோதரியே, உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன், தேவனுடைய குமாரன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தால், நீங்கள் சுகமாக வேண்டுமென்று நான் கேட்கிறேன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 141. தேவனுடைய வேதாகமத்தின் அதிகாரத்தின் மூலமாக, இப்போது பிரசன்னமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரின் சாட்சியின் மூலமாக, இந்த ஜீவிக்கிற தேவனுடைய சபையில், அவர் என்னோடுக்கூட இந்த வியாதிப்பட்ட ஜனங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார், ஒவ்வொரு நபரும் சுகமடையும்படி அவிசுவா சத்தின் பொல்லாத ஆவிகள் அவர்களை விட்டு போகும்படி, ஜீவிக்கிற தேவ னுடைய சபையாக கட்டளையிடுகிறோம், இந்த பெண் இப்போது சுகமடைவாளாக, இயேசுவின் நாமத்தால், ஆமென். சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, நீங்கள் சுகமடைய வேண்டுமென்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தால் கேட்கிறேன். சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, நீங்கள் சுகமாக வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் கேட்கிறேன். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. சர்வவல்லமையுள்ள தேவன், தன்னுடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக, உங்களை சுகமாக்கும் படியாக நான் ஜெபிக்கிறேன். ஆமென். என் சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, நீங்கள் சுகமாக வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் கேட்கிறேன். என் சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபித்து, நீங்கள் சுகமடைய வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் கேட்கிறேன். 142. நான் நிறுத்தி, அங்கேயிருக்கிறதான ரிக்கியின் அப்பாவிடம் கேட்கிறேன், அதைவிட அதிகமாக ஜெபம் செய்யப்படவில்லை. அது சரிதானே, சகோதரனே? வெறும் ஒரு சிறு ஜெபம். அதற்கான காரணம் என்னவென்றால், ரிக்கிக்காக ஜெபிக்க வேண்டியது நானாகத்தான் இருக்க வேண்டுமென்று தேவன் திட்ட மிட்டிருந்தார் என்று அந்த தகப்பன் விசுவாசித்தார். பாருங்கள், நீங்களும் இன்றிரவு அதை அந்த விதத்தில்தான் விசுவாசிக்க வேண்டும். காட்சிப்பொருளாயிருக்கும்படியாக நீங்கள் இங்கே வரவில்லை, உங்களில் சிலர் மரித்துக்கொண்டிருக்கிறீர்கள், தேவன் அதை செய்யப்போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். தேவன் தான் அதை செய்கிறார். சகோதரியே, நீங்கள் சுகமாக வேண்டுமென்று, நான் உங்களுக்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் ஜெபிக்கிறேன். என் சகோதரியே, நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன், என் கைகளை உங்கள் மீது வைத்து, உங்களுடைய சுகமளித்தலை இயேசுவின் நாமத்தால் கேட்கிறேன். என் சகோதரனே, உங்களுக்காக, இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். என் சகோதரியே, உங்களுக்காக, இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். ஆமென். 143. இப்போது, தேவனுடைய பிரசன்னத்தில், இந்த கூடுகையின், இந்த ஜனங்களின் சேனையின் முன்னிலையில், யாருக்கெல்லாம் ஜெபிக்கப் படவில்லையோ, அநேகமாக உங்களால் திரும்பி வர முடியாமல், நீங்கள் இங்கே இருந்து, நீங்கள் வியாதியால் கட்டப்பட்டிருந்தால், பரலோகத்தின் தேவன் தாமே உங்களை சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நீங்கள் கண்ட யாவற்றையும் நீங்கள் விசுவாசித்து, விசுவாசித்தால்... 144. இந்த மரியாதைக்குரிய மனிதன் தூக்குப் படுக்கையில் (stretcher) படுத்திருக்கிறார்...